‘மௌனகுரு’ இயக்குநருடன் கைகோத்த அர்ஜூன் தாஸ் - பூஜையுடன் படப்பிடிப்பு தொடக்கம்

By செய்திப்பிரிவு

‘மௌனகுரு’ பட இயக்குநர் சாந்தகுமார் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் நடிக்கும் புதிய படத்தின் பணிகள் பூஜையுடன் இன்று தொடங்கின.

'மெளனகுரு', 'மகாமுனி' ஆகிய படங்களால் கவனம் பெற்றவர் இயக்குநர் சாந்தகுமார். இவர் தன்னுடைய மூன்றாவது படத்தை 'டிஎன்ஏ மெக்கானிக் கம்பெனி' தயாரிப்பில் இயக்க உள்ளார். இந்தப்படத்தில் நாயகனாக அர்ஜூன் தாஸ் மற்றும் நாயகியாக தான்யா ரவிச்சந்திரன் நடிக்கின்றனர்.

இந்தப்படத்தில், ரேஷ்மா வெங்கடேஷ், சுஜித் ஷங்கர், ஜிஎம் சுந்தர், எஸ்.ரம்யா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். தமன் இசையமைக்கும் இப்படத்திற்கு சிவா ஒளிப்பதிவு செய்கிறார். படத்தின் படப்பிடிப்பு சென்னையில் பூஜையுடன் இன்று தொடங்கியது. இந்தப்படம் வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாக உள்ளதாக கூறப்படுகிறது. படம் அடுத்த ஆண்டு திரைக்கு வர உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்