‘சிஎஸ்கே’ படத்தை இயக்கிய எஸ்.சத்தியமுர்த்தி, அடுத்து ஹாரர் படத்தை இயக்குகிறார். ஆக்செஸ் ஃபிலிம் ஃபேக்டரி ஜி.டில்லி பாபு வழங்கும் இந்தப் படத்தில், முனிஷ்காந்த், பூர்ணேஷ், லாஸ்லியா, அவந்திகா, ஷாஷ்வி உட்பட பலர் நடிக்கின்றனர். இன்னும் பெயரிடப்படாத இதன் பூஜை திங்கட்கிழமை நடந்தது. படம்பற்றி இயக்குநர் எஸ்.சத்தியமுர்த்தி கூறியதாவது: இது, சஸ்பென்ஸ்- ஹாரர் த்ரில்லர் படம். பேய் படம்என்றாலும் வழக்கமானதாக இருக்காது. இதில் முதல் முறையாக ‘பயோனிக் ஹேண்ட்’ என்ற முறையை பயன்படுத்தப் போகிறோம். அதாவது செயற்கை கை. அந்தக் கை படத்தில் என்னவிதமான பிரச்னையை ஏற்படுத்துகிறது என்பதுதான் படம். சீரியஸான பேய் படமாக உருவாகும் இதன் திரைக்கதையில், திருப்பங்கள் இருக்கும். படத்துக்காக 20, 25 வருட பழமையான பாழடைந்த மருத்துவமனை தேவைப்பட்டது. விமான நிலையம் அருகே ஒரு கட்டிடத்தை அப்படி மாற்றி இருக்கிறோம். இந்தக் கட்டிடமே பயத்தை ஏற்படுத்துவதுபோல இருக்கும். இவ்வாறு கூறினார்.
முக்கிய செய்திகள்
சினிமா
55 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
22 hours ago