ஏ.ஆர்.ரஹ்மானோட மியூசிக் எப்படி இருக்கும்கிறது எல்லோருக்குமே தெரிஞ்சதுதான். சின்னதா வர்ற ஒரு சவுண்டு கூட ஹை ஸ்டாண்டர்டுல மியூசிக் பண்றவர். அவர் அமைக்கிற மியூசிக்கைக் கேட்கிறப்பவே, அந்தப் பாட்டுக்கு நல்ல டிரெஸ்ஸிங் வேணும், நல்ல லொக்கேஷன் வேணும், நல்ல கேமராமேன் வேணும், நல்ல கொரியோகிராஃபி இருக்கணும்னு இப்படி பல விஷயத்தை, அது உணர வைக்கும். இவ்வளவு விஷயத்தையும் அவரோட பாட்டு கேட்கிறதுனால அவரோட பாடலுக்கு ஒர்க் பண்றது கொஞ்சம் கஷ்டம்தான்.
அவரோட பாடலைக் கேட்கிறப்ப நம்மை அறியாமக் கூட நம்ம உடம்பு ஆட ஆரம்பிக்கும். அவ்வளவு சந்தோஷமா இருக்கும். இங்கே சந்தோஷம்னு சொல்றப்ப, ஒரு விஷயம் நினைவுக்கு வருது. கடந்த பல வருஷங்களா நடனம், நடிப்பு, டைரக்ஷன்னு… சென்னை, மும்பை, பெங்களூரு, ஹைதராபாத், வெளிநாடுகள்னு சுத்திட்டே இருக்கேன். பெரியப் பெரிய ஆளுங்களை நிறையப் பார்க்குறேன். அவங்கள்ல நிறையப் பேர் பணம், கார், பில்டிங், இடம் இதைப் பத்தித்தான் அதிகம் பேசுறாங்க. சாப்பிடுறப்ப சாப்பாட்டை ரசிச்சு சாப்பிடுறதே இல்லை. இந்த சாப்பாட்டுல இவ்வளவு கேலரீஸ், அதில் இவ்வளவு கேலரீஸ்னு அதைப் பத்திதான் பேசுறாங்க. மனம்விட்டு ஜாலியாப் பேசுறதே இல்லை.
நேர்ல பேசுறதை எல்லாம் போன்ல, வாட்ஸ் அப்ல மட்டுமேன்னு மாறிடுச்சு. நம்மக்கிட்ட இருக்குற சின்னச் சின்ன சந்தோஷமெல்லாம் பகிர்ந்துக்க முடியாமலே போச்சு. எனக்குக் கூட என் பசங்க இருக்குறப்ப போன் வரும். நானும் அந்தத் தப்பை பண்ணியிருக்கேன். ஆனா, இப்போவெல்லாம் போன் வந் துச்சுன்னா எடுத்து உடனே பேசிட்டு, டப்புன்னு வெச்சிடுவேன்.
ஜாலியா இருக்குறதைப் பத்திக் கூட இங்கே ஏன்? எதுக்குன்னு யோசிக் கிறாங்க. அப்படியே சில நேரத்தில் ஃபிரெண்ட்ஸ்களோட சேர்ந்து ஜாலியாப் பேசுற சூழ்நிலை வந்தாலும் கொஞ்ச நேரத்துக்கு அப்புறம், ‘ஒரு மணி நேரம் இப்படி இருந்துட்டோமே’ன்னு அடுத்து வேலைக்குள்ள ஓடிடுறாங்க. என்னோட ஸ்கூல் ஃபிரெண்ட் ஒருத்தன், எப்படியாவது எங்க எல்லாரையும் அடிக் கடி ஒண்ணுசேர்க்கணும்னு போராடி எங்களையெல்லாம் ஒண்ணு சேர்ப்பான்.
முந்தியெல்லாம் ஒர்க் பண்றதுக்குத் தான் யோசிப்பாங்க. இப்போவெல்லாம் ஜாலியா இருக்குறதுக்குக் கூட யோசிக்கிறாங்க. நான் எப்பவுமே கொரி யோகிராஃபி, நடிப்பு, டைரக்ஷன்னு இருக்கும்போது ரொம்ப ஜாலியாவே பண்ணுவேன். ஸ்ட்ரிக்டாவும் இருப் பேன். ஆனா, ஜாலியாவும் இருப்பேன்.
அந்த மாதிரிதான் நான் கொரியோகிராஃப் பண்ண ஒரு பாட லைப் பத்தி சொல்றேன். ஹிந்தியில ‘புக்கார்’னு ஒரு படம். போனி கபூர் சார் தயாரிச்சது. அதில் ‘கே சரா.. சரா’ன்னு ஒரு பாட்டு. இந்தப் பாட்டுக்கு கொரியோகிராஃபி செய்ய எனக்கு அழைப்பு வந்துச்சு. எனக்கு முன்னாடியே ரெண்டு கொரியோகிராஃபர் இதே சூழலுக்கு வேற வேற பாட்டு செஞ்சு அது அவங்களுக்கு செட் ஆகலை. மூணாவதா நான் உள்ளே வர்றேன். எனக்கா, ‘இது என்னடா வம்பா இருக்குது. இக்கட்டான நிலையா இருக்கே. நானும் சாதாரண ஆள்தானே! இவங்க நம்மை டெஸ்ட் பண்றாங்களா? அந்த ரெண்டு பேரைவிட நாம நல்லா பண்ணணுமே.
அப்படி நல்லாப் பண்ண லைன்னா நம்மையும் தூக்கிடுவாங் களா?’ இப்படி உள்ளுக்குள்ள என்னன் னென்னமோ ஓடிட்டிருக்கு. வேணாம்னு சொல்லணும்னுதான் தோணுச்சு. முன்னாடி தயாரிப்பாளர் போனி கபூர் சார் வேற இருக்காரு. முதல்முறையா மாதுரி தீட்ஷித் மேடம்கூட மாஸ்டரா வேற பண்றோம். ரஹ்மான் மியூசிக் வேற. பாடலையும் கேட்டாச்சு. என்னால முடியாதுன்னு சொல்ல முடியலை. ‘‘ஓ.கே.சார்!’’னு சொல்லிட்டேன்.
தயாரிப்பாளர் போனி கபூர் சாரிடம் ஒரு குறிப்பிட்ட தொகையைச் சம்பளமா கேட்டேன். அதுக்கு அவர் ‘‘அதிகமா இருக்கே?’’ன்னு சொன்னார். ‘‘கொடுக்குறதும் கொடுக்காததும் உங்க இஷ்டம் சார்!’’னு சொல்லிட்டு கிளம்பத் தயாரானேன். அந்த இடத்தில் எனக்கும் போனி கபூர் சாருக்கும் ஒரு சின்ன வாக்குவாதம் வந்துச்சு. அந்த வாக்குவாதத்துலேர்ந்துதான் நாங்க ரெண்டு பேரும் ரொம்ப நெருக்கமாக ஆரம்பிச்சோம். போனி கபூர் சார் என்னோட அண்ணன் மாதிரி. அவர்தான் என்னை, ‘வான்டட்’ படம் மூலம் ஹிந்திக்கு அழைச்சுட்டுப் போனார். இப்பவும், எப்பவும் அவர் கூப்பிட்டா உடனே படம் பண்ண ரெடியா இருக்கேன்.
‘கே சரா சரா’ பாடலுக்குத் தயாரா னோம். மாதுரி தீட்ஷித் மேடம்கிட்ட, ‘‘உங்களோட சேர்ந்து பண்ற முதல் பாட்டு இது. என்னோட திறமையைக் காட்டணும்!’’னு சிரிச்சிட்டே சொன் னேன். அவங்களும் சிரிச்சிகிட்டே, ‘‘ஓ.. அப்படியா? நோ பிராப்ளம் பிரபு. பத்து முறை ரிகர்ஷல் பண்ணுவோமா? இல்லை… இருபது முறை? ஏன்… நாப்பது முறை… நூறு முறைன்னாலும் ஓ.கேதான்!’’ன்னு தயாரானாங்க. அதே மாதிரி நிஜமாவே பண்ணினாங்க. அதுதான் மாதுரி தீட்ஷித்! அப்படி ஒரு டெடிகேஷன். ஏழு நிமிஷம் ஷூட் செஞ்சப் பாட்டு அது. படத்தில் 4 நிமிஷம்தான் வரும். ‘பயங்கர எனர்ஜியோட பண்ண பாட்டாச்சே. மூணு நிமிஷம் குறைஞ்சிட்டே!’ன்னு முதல்ல வருத்தமா இருந்துச்சு. டைரக்டர் ஆனதுக்குப் பிறகு அதெல்லாம் இயல்பாவே புரிஞ்சுது.
படம் ரிலீஸானதும் அந்தப் பாட்டுக்கு அப்படி ஒரு கிரேஸ். போனி கபூர் சாருக்கு ரொம்ப ஹேப்பி. எனக்கா அப்பாடான்னு இருந்தது. ஏன்னா, முன்னாடி நடந்த அந்த வாக்குவாதத்துல பணம் பத்தியெல்லாம் பேச்சு வந்ததால, திரும்பி பணத்தைக் கேட்க மாட்டார்னு தெரிஞ்சுது. அவரும் அந்த மாதிரி ஆள் கிடையாது. சூப்பர் புரொடியூசர். போனி கபூர் சாருக்கு எப்பவுமே தன்னோட படம் பெருசா இருக்கணும்னு ஒரு நினைப்பு இருக்கும். படம் நல்லா வரணும்னா உயிரையே தருவார். எவ்வளவு கஷ்டம் இருந்தாலும் படத்துல காம்ப்ரமைஸ் ஆக மாட்டார். இதுக்கு உதாரணமா ‘வாண்டட்’ அப்போ பேங்காக்ல சல்மான் கான் சார்கூட ரெண்டு, மூணு கிளப்ல ஒரு பாட்டு பண்ணோம். நல்லா வந்தது. எங்க எல்லாருக்கும் பிடிச்சுது. ஆனா, அவருக்கு மட்டும் ஒரு குறை இருந்தது. அதனால அதே பாட்டைத் திரும்பவும் மும்பையில மூணு கோடியில இருந்து நாலு கோடி வரைக்கும் செலவு பண்ணி எடுத்தார். நான் நிறைய முறை, ‘‘வேணாம் சார்… இந்தப் பாட்டுக்கு ஏற்கெனவே நாம எடுத்தது போதும்!’’னு சொன்னேன். ஆனா, அவர், ‘‘இல்லை பிரபு. உன் சைடு நல்லா இருக்கு. சல்மான் கானும் நல்லா ஆடியிருக்கார். ஆனா, தயாரிப்பாளரா என் சைடுலேர்ந்து புரொடக்ஷன் வேல்யூவே இல்லையே, எனக்கு ஒரு மாதிரியா இருக்கு. நல்லா செலவு செஞ்சு இந்தப் பாட்டை பண்ணணும்னு விரும்பறேன்?’’னு சொன்னார். சொன்னது மாதிரியே பண்ணவும் செய்தார்.
இப்படிப்பட்ட அனுபவமும் இருக்கு. இதுக்கு நேர் எதிர்மாறான அனுபவமும் இருக்கு. அது என்ன?
- இன்னும் சொல்வேன்…
முக்கிய செய்திகள்
சினிமா
8 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
1 day ago