ஷங்கர் - கமல் கூட்டணியில் உருவாகும் 'இந்தியன் 2' படத்தில் முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங் நடிக்கவுள்ளார்.
இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் படம் 'இந்தியன் 2'. இந்தப் படத்தில் காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் நடிக்க உள்ளனர். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இதற்கான படப்பிடிப்பு கடந்த 2019-ம் ஆண்டு தொடங்கியது. ஆனால், அப்போது ஏற்பட்ட விபத்து காரணமாக படம் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து கரோனா, படத்தின் பட்ஜெட் தொடர்பான பிரச்சினைகள் உள்ளிட்ட காரணங்களால் படப்பிடிப்பு தடைப்பட்டது. இதையடுத்து, தற்போது மீண்டும் 'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. அண்மையில் சென்னை எழிலகத்தில் படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைப்பெற்றது.
இந்நிலையில், இந்தப் படத்தில் முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங் நடிக்க உள்ளார். இதனை அவரே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில், ''கேமராவுக்குப் பின்னால் இருக்கும் அனைத்து ஹீரோக்களுக்கும் மரியாதை செலுத்துகிறேன். என்னை மேலும் அழகாக மாற்றியதற்கு மேக்கப் மேனுக்கு நன்றி. கமல்ஹாசனுடன் இந்தியன் 2 படத்தில் நடிக்க ரெடியாகிவிட்டேன்'' என பதிவிட்டுள்ளார்.
» பிரபல இசைக் கலைஞர் அருணா சாய்ராமுக்கு செவாலியர் விருது
» புனித் ராஜ்குமாருக்கு ‘கர்நாடக ரத்னா விருது’ வழங்கும் நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் பங்கேற்பு
முக்கிய செய்திகள்
சினிமா
50 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
22 hours ago