லைகாவுடன் 2 படங்கள் நடிக்க ரஜினி ஒப்பந்தம்: நவ.5-ல் பட பூஜை

By செய்திப்பிரிவு

'ஜெயிலர்' படத்தைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த், லைகா நிறுவனத்துடன் இரண்டு படங்கள் நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளார். அதில் ஒரு படத்துக்கான பூஜை நவம்பரில் நடக்கிறது.

'பீஸ்ட்' படத்தைத் தொடர்ந்து இயக்குநர் நெல்சன், நடிகர் ரஜினியுடன் கைகோத்துள்ளார். 'ஜெயிலர்' என தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்திற்கு நெல்சனுடன் இணைந்து கே.எஸ்.ரவிக்குமார் திரைக்கதை எழுத உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அனிருத் இசையமைக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ரம்யா கிருஷ்ணன், சிவராஜ்குமார், விநாயகன் நடிக்கும் இப்படத்தில் நாயகியாக தமன்னா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்தப் படத்தைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் லைகா தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து அடுத்த இரண்டு படங்களில் நடிக்க உள்ளதாக ஒப்பந்தம் செய்துள்ளார். அதில் ஒரு படத்திற்கான பூஜை வரும் நவம்பர் 5-ம் தேதி பிரமாண்டமாக நடைபெற உள்ளதாக லைகா நிறுவனத்தின் தலைமை நிர்வாகி தமிழ் குமரன் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்