‘‘ஆக்ஷன் டிராக்ல போய்ட்டிருக்கிற விஷால் முழுக்க காமெடின்னு இறங்கினதே இல்லை. படத்துக்குள்ள இன்னொரு காமெடியன் இருந்தா அவ்வளவு சீக்கிரம் கதையை டிக் அடிக்கவே மாட்டார் பங்காளி வடிவேலு. ‘உங்களை நம்பி உள்ளே வர்றேன்ணே’ன்னு சொல்லிட்டுதான் சூரி ஷூட்டிங் வந்தார். துறுதுறுன்னு ஒரு ஹீரோயின்னு தேடினப்போ தமன்னா ஞாபகம் வந்துச்சு. இப்படி இவங்க எல்லாரையும் ஒண்ணு சேர்த்ததே பெரிய கத்திக்குத்துக் கதையா ஆயிடுச்சு!’’ என்கிறார் ‘கத்திசண்டை’ படத்தின் இயக்குநர் சுராஜ்
காமெடியும், ஆக்ஷனும் சேர்த்து மீண்டும் கமர்ஷியல் தடத்தில் நின்று ‘கத்திசண்டை’ படத்தை இயக்கியுள்ளார் சுராஜ். அவரோடு ஒரு நேர்காணல்..
விஷால், தமன்னா, சூரின்னு இணைந்த இந்தக் கூட்டணிக்குள் வடிவேலு எப்படி வந்தார்?
‘அப்பா டக்கர்’ படத்தை நான் எடுக்குறதுக்கு முன்னாடியே விஷால்கிட்ட சொன்ன கதை இது. ‘நல்லா இருக்கு. பண்ணு வோம்’னு சொல்லிட்டு அடுத் தடுத்து ‘பாயும்புலி’, ‘மருது’ன்னு இறங்கிட்டார். நானும் என் படத் துல இருந்தேன். திடீர்னு ஒருநாள் விஷால், ‘மறுபடியும் அந்தக் கதையை ஒருமுறை சொல்ல முடியுமா?’ன்னு கேட்டார். சொன்னேன். ‘ஆரம்பிச்சுடுவோம். செகண்ட் ஆஃப்ல கதை சொல் லும்போது அந்த கதாபாத்திரம் வடிவேலு சாரை நினைவுபடுத்து துன்னு சொல்லி, அவர்கிட்ட கேளுங்களேன்’ என்று சொன் னார். ‘பங்காளி வடிவேலு ஹீரோவா நடிச்சுட்டிருக்காரே.. எப்படி’ன்னு யோசிச்சுக்கிட்டே அவர்கிட்ட போனேன். என்னைப் பார்த்ததும், ‘என்ன பங்காளி. மறுபடியும் வர்றோம்னா செம காமெடியா இருந்தாத்தான் சரி வரும். கதையை சொல்லுங்க, பார்க்கலாம்’னார். சொன்னதும் பிடிச்சுப்போய் ‘பண்றேன், பங்காளி’ன்னார்.
உடனே அவர்கிட்ட, ‘இந்தக் கதையில சூரி இருக்கார்’னு சொன்னேன். ‘ஓ.. அப்படியா? பார்த்துக்கலாம்’னு ‘ஓ.கே.’ சொல்லிட்டார்.
படத்தில் வடிவேலு இருக்கும் போது, சூரிக்கு பெரிதாக என்ன வேலை?
பரதநாட்டியம், கரகாட்டக்காரி, கராத்தே மாஸ்டர்னு ஐந்து ஆறு கெட்டப்புல சூரி வருவார். அவருக்கு இது எல்லாமே புதுசு. ஒருதலைக்காதல் வேற இருக்கும். கண்டிப்பா அவரை மக்கள் ரசிப்பாங்க.
காமெடி, காதல், கொஞ்சம் ஆக்ஷன் - அந்த களத்தை விட்டு நீங்கள் வெளியே வரவில்லையே. ஏன்?
அதைத் தாண்டி எனக்கு எது வும் பெரிதாக தெரியாது. அதுதான் உண்மை. உதவி இயக்குநர் களோட அமர்ந்து, கதையில இப்படி ஒரு கொலை சம்பவம்னு ஆரம்பிச்சாகூட, ‘சார் காமெடியா இருக்கு சார்’னு சொல்றாங்க. அது தான் என் இயல்பு. ‘தசாவதாரம்’ மாதிரி ஒரு படம் எடுங்கன்னா, சத்தியமா என்னால எடுக்க முடி யாது. நகைச்சுவைதான் நம்ம பலம்னா, அதோட இருந்துடணும். சரிதானே!
‘கத்திசண்டை’ படத்தில் தமன்னா, விஷால், சூரி
தனுஷ், ஜெயம்ரவி, விஷால்னு அந்த நேரத்துக்கு தகுந்த மாதிரி ஹீரோவோட பயணிக்கிறீங்க. கமர்ஷியல் களத்தை பெரிதும் விரும்பும் விஜய், அஜித் மாதிரி நாயகர்களை வைத்து படம் பண்ணவில்லையே?
‘மருதமலை’ - விஜய்க்கு சொன்ன கதை. ‘அலெக்ஸ் பாண்டி யன்’ - அஜித்துக்கு சொன்ன கதை. அந்த நேரமும், கதையும் யாரை விரும்புதோ அந்த பாதையில் போய்ட்டிருக்கேன். சீக்கிரமே விஜய்யை வைத்து ஒரு படம் பண்ணணும்னு ஆசை இருக்கு.
சுந்தர்.சி படங்களும், உங்கள் படங்களும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருக்கே. அவரோட உதவியாளர்ங் கிறதால வந்த பாதிப்பா?
‘முறைமாமன்’, ‘மேட்டுக்குடி’, ‘உள்ளத்தை அள்ளித்தா’ன்னு 15 ஆண்டுகள் சுந்தர்.சி சார்கிட்ட இருந்தேன். அவருக்கே தெரி யும்.. கதை விவாதத்துல ‘இன்னும் காமெடி, காமெடி’ன்னு கொஞ்சம்கூட கதையே பண்ண விடமாட்டேன். வெளியே வரும் போது நான் நானாகவே வந்தேன். இன்னைக்கு 60 நாட்கள்ல படத்தை முடிச்சிடுறேன். அந்த நுணுக்கம் சுந்தர் சார்கிட்ட கத்துக்கிட்டதுதான். மத்தபடி நான் வைக்கிற காமெடி விஷ யங்கள் எல்லாமே என் வாழ்க்கையில பார்த்தது, கேள்விப்படுறதுதான்.
‘ஏ’ வகுப்பு ரசிகர்களை ஏன் கவனத்தில் கொள்வதில்லை?
நான் ‘பி’, ‘சி’ வகுப்பு வாழ்க் கையை அனுபவித்தவன். அதுவும் காரணமா இருக்கலாம். சினிமா வுல இத்தனை ஆண்டுகள் ஓடி விட்டது. ஆனால், நான் இன்று வரைக்கும் ஒரு மால் தியேட்டர்லகூட படம் பார்த்த தில்லை.
பாப்கார்ன், பீட்ஸா, பர்கரை தின்று கொண்டு படம் பார்க்க எனக்கு பிடிக்காது. அப்படி யாரையாவது பார்த்தால் கோபம்தான் வருகிறது. ஒரு படம்னா அப்படியே அதுக் குள்ள போய்டணும்.
வடிவேலு, சூரி உங்கள் படத்தில் இணைந்தது மாதிரி விவேக், சந்தானம் இருவரும் இணைந்து நடிக்கிறார்களே?
நல்லதுதானே. 2 காமெடி நடிகர்கள் இணைந்து ஒரே படத் தில் நடிக்கும் சூழல் தமிழில் தான் குறைவாக இருக்கிறது. தெலுங்கில் பிரம்மானந்தம் நடிக் கும் படத்தில் அலி, வேணு, சுனில்னு 4 காமெடி நடிகர்கள் இருக்கிறார்கள். இங்கே வடிவேலு, சூரி இருவரை யும் ஒரே படத்துல ஒரே பிரேம்ல பார்க்கும்போது ரசிகர் களுக்கு சந்தோஷமாத்தானே இருக்கும்.
‘கத்திசண்டை’க்கு அடுத்து?
2 நாயகர்களிடம் கதை சொல்லியிருக்கேன். ‘கத்தி சண்டை’ படத்தை பெரிதாக நம்பு கிறேன். வெளிவந்ததும், 2 மாதம் ஊர் சுற்றிவிட்டு திரும்ப வந்து கதைக்குள்ள உட்காருவோம். அதுவும் கண்டிப்பா காமெடிதான்! ஏன்னா.. காமெடி இல்லாமல் என்னை நானே நினைச்சுக்கூட பார்க்க முடியாது.
முக்கிய செய்திகள்
சினிமா
10 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
1 day ago