கார்த்தியின் ‘சர்தார்’, சிவகார்த்திகேயனின் ‘பிரின்ஸ்’ - வசூலில் முந்துவது எது?

By செய்திப்பிரிவு

தீபாவளியையொட்டி வெளியான கார்த்தியின் 'சர்தார்' மற்றும் சிவகார்த்திகேயனின் 'பிரின்ஸ்' படங்கள் வசூலில் முன்னேற்றத்தை கண்டு வருகின்றன.

பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் கடந்த அக்டோபர் 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் 'சர்தார்'. ராஷிகண்ணா, ரஜிஷா விஜயன், லைலா உள்ளிட்டோர் நடிந்திருந்த இந்தப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்திருந்தார். தண்ணீர் மாஃபியா, உளவாளியின் வாழ்க்கை குறித்த கதையை அடிப்படையாக கொண்ட இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்நிலையில், படம் கடந்த 5 நாட்களில் ரூ.50 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தெலுங்கு இயக்குநர் அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் 'பிரின்ஸ்'. கடந்த அக்டோடபர் 21-ம் தேதி தீபாவளியை முன்னிட்டு வெளியான இப்படத்தில் உக்ரைன் நடிகை மரியா நடித்திருந்தார். தமன் இசையமைத்திருந்த இப்படம் காதல் கதையை மையமாகக் கொண்டு வித்தியாசமான காமெடி ஜானரில் உருவாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. படம் வெளியாகி 5 நாட்கள் ஆன நிலையில், ரூ.40 கோடி வரை படம் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

விமர்சன ரீதியாக ரசிகர்களிடையே 'பிரின்ஸ்' சற்று பின்தங்கியே உள்ளது. இதனால் 'சர்தார்' படத்திற்கான வரவேற்பு கூடியுள்ளது. மேலும், நவம்பர் 4-ம் தேதி வரை பெரிய படங்கள் எதுவும் வெளியாகததால் இரண்டு படங்களுக்கும் வசூல் கூடலாம் என திரை வர்த்தகர்கள் கணித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

31 mins ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

1 day ago

மேலும்