தாய் மண்ணே வணக்கம் - மோடியின் வீடியோவை ஷேர் செய்த ஏ.ஆர்.ரஹ்மான்

By செய்திப்பிரிவு

பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்த 'வந்தே மாதரம்' வீடியோவை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி தீபாவளியை ஒவ்வொரு ஆண்டும் ராணுவ வீரர்களுடன் கொண்டாடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அந்த வகையில் இந்த ஆண்டும் கார்கில் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடினார். அப்போது வீரர்கள் அவருக்காக ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த வந்தே மாதரம் பாடலை பாடினர். அதை பிரதமர் மிகவும் ரசித்துக்கேட்டார். அப்போது எடுக்கப்பட்ட விடியோவை பிரதமர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், ''இதயம் இதயம் துடிக்கின்றதே எங்கும் உன்போல் பாசம் இல்லை ஆதலால் உன் மடி தேடினேன் தாய் மண்ணே வணக்கம்'' என வந்தே மாதரம் பாடலின் தமிழ் வரிகளைப் பகிர்ந்து தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

5 mins ago

சினிமா

39 mins ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

மேலும்