சிவகார்த்திகேயனின் 'பிரின்ஸ்' மற்றும் கார்த்தியின் 'சர்தார்' படங்களின் முதல் நாள் வசூல் எவ்வளவு என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
தெலுங்கு இயக்குநர் அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் நேற்று (அக்டோபர் 21) திரையரங்குகளில் வெளியான படம் 'பிரின்ஸ்'. இதில் உக்ரைன் நடிகை மரியா நாயகியாக நடித்திருந்தார். சத்யராஜ், பிரேம்ஜி, சூரி உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்திற்கு தமன் இசையமைத்திருந்தார். கலவையான விமர்சனங்களைப் பெற்று வரும் இப்படம் முதல் நாளில் ரூ.7.03 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதேபோல பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் நேற்று வெளியான படம் 'சர்தார்'. ராஷிகண்ணா, ரஜிஷா விஜயன் உள்ளிட்டோர் நடித்துள்ள படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்திருந்தார். தண்ணீர் அரசியல் குறித்தும், உளவாளி ஒருவரின் வாழ்க்கை குறித்த படமாக வெளியான இப்படமும் ரசிகர்களிடமிருந்து கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. தீபாவளியை முன்னிட்டு வெளியான இப்படம் திரையரங்குகளில் முதல் நாள் வசூலாக ரூ.6.91 கோடியை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.
இரு படங்களுமே வசூலில் சம அளவில் காணப்படும் நிலையில், அடுத்த இரண்டு நாட்களும் விடுமுறை தினங்கள் என்பதால் படத்தின் வசூல் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago