தீபாவளியை முன்னிட்டு திரையரங்குகளில் சிறப்புக் காட்சிகளுக்கு அரசு அனுமதி 

By செய்திப்பிரிவு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் சிறப்புக் காட்சிகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

இந்தாண்டு தீபாவளி பண்டிகை வரும் அக்டோபர் 24-ம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. பட்டாசு வெடிப்பதை விட, திரையரங்குகளுக்குச் சென்று தீபாவளியையொட்டி வெளியான படங்களை பார்ப்பது தான் ரசிகர்களுக்கு பெரும் ஆவலை ஏற்படுத்தும். அந்த வகையில் இந்த ஆண்டு சிவகார்த்திகேயனின் 'பிரின்ஸ்' திரைப்படமும், கார்த்தி நடிப்பில் 'சர்தார்' திரைப்படமும் தீபாவளியையொட்டி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்நிலையில் ரசிகர்கள் தீபாவளிக்கு வெளியாகும் படங்களை கண்டு ரசிக்கும் வகையில் தமிழக அரசு திரையரங்குகளில் சிறப்புக் காட்சிகளை திரையிட அனுமதி அளித்துள்ளது. முன்னதாக சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி அளிக்க கோரி திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் சார்பில் அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. தற்போது அந்த கோரிக்கை ஏற்கப்பட்டு வரும் 21-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை 7 நாட்களுக்கு சிறப்புக் காட்சிகளை திரையரங்குகளில் திரையிட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

29 mins ago

சினிமா

14 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்