விஜய் சேதுபதி, காயத்ரி சங்கர் உட்பட பலர் நடித்து ஜூன் மாதம் வெளியான படம், ‘மாமனிதன்’. சீனு ராமசாமி இயக்கி இருந்தார். இந்தப் படத்தை அடுத்து 3 படங்களை இயக்க இருப்பதாகத் தெரிவித்துள்ளார். இதுபற்றி கூறியதாவது:
சினிமா பல சவால்களை இன்று எதிர்கொண்டி ருக்கிறது. சிறுபட்ஜெட் மற்றும் நல்ல கதைகளைக் கொண்ட திரைப்படங்களைப் பார்க்க தியேட்டர்களுக்கு கூட்டம் வருவதில்லை. இதற்கிடையே அசல் தன்மையோடும், உலக சினிமா மொழியோடும் வருகிற படங்களுக்கு ஓடிடி தளங்களில் வரவேற்பு கிடைக்கிறது. திரையரங்குகளில் ரசிகர்களின் வரவேற்பு குறைவாக இருந்தாலும் ஓடிடி தளத்தில் ‘மாமனிதன்’ சிறப்பான வரவேற்பை பெற்றிருக்கிறது. இதுவரை 70 சர்வதேச பட விழாக்களில் திரையிடப்பட்டு 46 விருதுகளைப் பெற்றிருக்கிறது. அடுத்து 3 படங்கள் இயக்க இருக்கிறேன். ‘மெஹந்தி சர்க்கஸ்’ படத்தில் நடித்த மாதம்பட்டி ரங்கராஜ் தயாரித்து, நடிக்கும் படம், சி.வி.குமார் தயாரிக்கும் படம், ‘நெஞ்சுக்கு நீதி’ ராகுல் தயாரிக்கும் படங்களை இயக்க இருக்கிறேன். நான் இயக்கி இருக்கிற, ‘இடிமுழக்கம்’, ‘இடம் பொருள் ஏவல்’ படங்கள் ஜனவரிக்குள் வெளியாகும். இவ்வாறு சீனு ராமசாமி தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
சினிமா
53 mins ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago