ஃபேன்டஸி படத்தில் யோகிபாபு

By செய்திப்பிரிவு

மலையாள இயக்குநர் ரெஜிஷ் மிதிலா தமிழில் அறிமுகமாகும் படம் ‘யானை முகத்தான்’. யோகிபாபு நாயகனாக நடிக்கிறார். ரமேஷ் திலக், கருணாகரன், ஊர்வசி உட்பட பலர் நடிக்கின்றனர். தி கிரேட் இந்தியன் சினிமாஸ் தயாரிக்கும் இப்படத்துக்கு, கார்த்திக் எஸ்.நாயர் ஒளிப்பதிவு செய்கிறார்.

படம் பற்றி ரெஜிஷ் மிதிலா கூறும்போது, “மலையாளத்தில் எனது படம் மூலம் ரமேஷ் திலக் அறிமுகமானார். எனது ஒரு கதையை கேட்ட அவர், இதற்கு யோகிபாபு சரியாக இருப்பார் என்றார். அவர் சொல்லி, யோகிபாபுவை சந்தித்தேன். கதையை கேட்டதும் நடிக்கிறேன் என்றார். யோகிபாபுவே, கருணாகரன், ஊர்வசி ஆகியோரை அழைத்து நடிக்கச் சொன்னார். ஃபேன்டஸி படமான இதில், ஆட்டோ டிரைவராக ரமேஷ் திலக் வருகிறார். விநாயக பக்தரான அவர், கொஞ்சம் ஏமாற்றுப் பேர்வழி. அவரது வாழ்க்கையில் யோகிபாபு வந்ததும் என்ன விநோதங்கள் நடக்கிறது என்பதுதான் கதை. ராஜஸ்தானில் ஆரம்பித்து, சென்னை வரை படப்பிடிப்பு நடத்தி உள்ளோம். எனது அடுத்த படத்திலும் யோகிபாபுதான் நாயகன்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

10 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்