சிவகார்த்திகேயன் நடிக்கும் 'பிரின்ஸ்' படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
அண்மையில் வெளியான 'டான்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படம் 'பிரின்ஸ்'. தமிழ், தெலுங்கில் உருவாகும் இப்படத்தை தெலுங்கு இயக்குநர் அனுதீப் இயக்குகிறார். இதில் உக்ரைன் நடிகை மரியா கதாநாயகியாக நடித்துள்ளார். அவரைத் தவிர, நடிகர் சத்யராஜ், பிரேம்ஜி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் இந்தப் படத்துக்கு தமன் இசையமைக்கிறார்.
இந்தப் படத்திலிருந்து முதல் பாடலாக பிம்பிலிக்கி பிலாப்பி என்ற பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து, இரண்டாவது பாடலான ஜெஸ்ஸிகாவும் வெளியானது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் அக்டோபர் 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
ட்ரெய்லர் எப்படி?
» நயன்தாராவும் நானும் அம்மா, அப்பாவாகிவிட்டோம் - விக்னேஷ் சிவன் நெகிழ்ச்சிப் பதிவு
» ஒரு காபியுடன் ஒரு மணி நேர உரையாடல் - ரஜினியுடனான சந்திப்பு குறித்து சரத்குமார்
'சாதி மதம்னு இன்னுமாடா அடிச்சிகிறீங்க' என்ற சத்யராஜின் வசனத்துடன் ட்ரெய்லர் தொடங்குகிறது. கடந்த முறை மாணவராக 'டான்' படத்தில் நடித்திருந்த சிவகார்த்திகேயன் தற்போது அப்டேட்டாகி ஆசிரியராக இப்படத்தில் நடித்துள்ளார். பிரிட்டிஷைச் சேர்ந்தவரை இந்தியர் ஒருவர் காதலிக்கிறார். அவர்களின் காதலில் நிகழும் பிரச்னைகளை காமெடி கலந்து கலர்ஃபுல்லாக கொடுத்திருக்க முயன்றிருப்பதை படத்தின் ட்ரெய்லர் உணர்த்துகிறது. பெரிய அளவில் சீரியஸ்னஸ் இல்லாமல் ட்ரெய்லர் ஜாலியாகவே கடக்கிறது. படம் தீபாவளிக்கு திரையரங்குகளில் வெளியாகிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
3 mins ago
சினிமா
37 mins ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago