கடந்த 30-ம் தேதி வெளியான ‘பொன்னியின் செல்வன் பாகம் 1’ திரைப்படம் மலேசிய நாட்டில் தரமான வசூலை ஈட்டி வருவதாக அதிகாரபூர்வமாக தகவல் வெளியாகி உள்ளது. படம் வெளியான முதல் ஆறு நாட்களில் சுமார் 11.18 மில்லியன் மலேசிய ரிங்கிட் வசூல் செய்துள்ளதாக விநியோகஸ்தர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நடிகர்கள் விக்ரம், ஐஸ்வர்யா ராய், திரிஷா, கார்த்தி, ஜெயம் ரவி, பிரகாஷ்ராஜ், சரத்குமார், பார்த்திபன், ஜெயராம், பிரபு, விக்ரம் பிரபு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளம் இணைந்து நடித்துள்ள படம்தான் ‘பொன்னியின் செல்வன்’. கல்கியின் வரலாற்று நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட இப்படத்தை மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ், சுபாஷ்கரனின் லைகா புரொட்க்ஷன்ஸ் இணைந்து தயாரித்தது. மணிரத்னம் இயக்கியுள்ள இப்படத்துக்கு இசை ஏ.ஆர்.ரஹ்மான்.
இந்தப் படம் வெளியானது முதல் இதுவரையில் தமிழகம் உட்பட உலகம் முழுவதும் தரமான வசூலை எட்டி வருகிறது. அது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியான வண்ணம் உள்ளது. இந்நிலையில், இந்தப் படத்தின் வசூல் மலேசியாவிலும் மாஸ் ஆக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த நாட்டில் 5 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனையாகி உள்ளதாகவும். படம் வெளியான ஆறு நாட்களில் சுமார் 11.18 மில்லியன் மலேசிய ரிங்கிட் வசூல் செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
» ஆலங்குடி சம்பவம் | அடக்குமுறைகளைத் தடுக்கத் தவறி வேடிக்கைப் பார்க்கும் திமுக தலைமை: சீமான் சாடல்
» தமிழகத்தில் பெண்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயண திட்டத்தில் இதுவரை 176 கோடி பயணங்கள்
அதோடு நடப்பு ஆண்டில் அந்த நாட்டில் வெளியான படங்களில் அதிக வசூலை ஈட்டியுள்ள படம் இது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு கமல்ஹாசனின் ‘விக்ரம்’ பட வசூலையும் பொன்னியின் செல்வன் முந்தி உள்ளதாம்.
முக்கிய செய்திகள்
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago