காலில் அறுவை சிகிச்சை செய்துகொண்டு, மாதக் கணக்கில் மருத்துவமனையில் ஓய்வில் இருந்த ‘நவரச நாயகன்’ கார்த்திக் புதுத் தெம்புடன் புறப் பட்டுக் கொண்டிருக்கிறார் தன் முதல் படத்தை இயக்குவதற் காக! அவரோடு உரையாடியதில் இருந்து..
நடித்துக் களைத்தது போதும்.. சினிமா இயக்கிப் பார்க்கலாம் என்று இறங்கிவிட்டீர்களா?
அது 1981 ஜனவரி 29. எங்கள் வீட்டுக்கு வந்த பாரதிராஜா சார், தனது படத்தில் என்னை நடிக்க வைக்க வேண்டும் என்ற விருப்பத்தை அப்பாவிடம் சொல்கிறார். உடனேயே சம்மதம் கிடைத்து, நான்கே நாட்களில் ‘அலைகள் ஓய்வதில்லை’ படப்பிடிப்பில் இருந்தேன். விளையாட்டாக 35 ஆண்டுகள் ஓடிவிட்டன. எனக்கான ரசிகர்கள் இன்னமும் இருக்கிறார்கள். அவர்களுக்காக நடித்துக்கொண்டே இருப்பேன். அதேசமயம், இயக்குநராகவும் சாதிக்க வேண்டும் என்பது ஏழெட்டு ஆண்டுகளாக என்னை உந்தித் தள்ளிக்கொண்டிருந்த விஷயம். இப்போது காலம் கனிந்திருக்கிறது.
அது எந்த மாதிரி கதை?
காதல், க்ரைம் அனைத்தும் கலந்த சமகாலத்து படமாக இருக்கும். ஆனால், கதையைக் கேட்காதீர்கள். அது சஸ்பென்ஸ்!
இந்தக் காலத்துக்கு ஏற்ற ரசனையுடன் ஒரு வெற்றிப் படத்தை உங்களால் தரமுடியும் என்று நம்புகிறீர்களா?
நிச்சயமாக! மருத்துவமனையில் இருந்த 6 மாதங்களில் நிறைய படங்கள் பார்த்தேன். யார் யாரெல்லாம் எப்படி எல்லாம் படம் செய்திருக்கிறார்கள் என்பதை தெரிந்துகொள்ள அது ஒரு வாய்ப்பாக அமைந்தது. முன்புக்கும் இப்போதைக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. அதையெல்லாம் தாண்டி அறிவுபூர்வமான, காஸ்ட்லியான, மாடர்ன் படமாக அது இருக்கும். தமிழில் இதுவரை யாருமே இப்படியொரு படத்தை இயக்கவில்லை என்று, படம் வெளிவந்த பிறகு சினிமா உலகமே பேசும்.
ஹீரோயின் யார்?
படத்தில் கார்த்திக்குக்கு மட்டுமல்லாமல் எல்லா நடிகர்களுக்கும் முக்கியத்துவம் இருக்கிறது அதனால், முழுக்க முழுக்க புரொஃபஷனல் நடிகர்களைத் தேடுகிறேன். பத்திரிகையாளர், மருத்துவர் உட்பட படத்தில் 3 முக்கியமான பெண் கதாபாத்திரங்கள் வருவதால், இயல்பான தோற்றத்தில் நடிக்க ஏற்ற முகங்களுக்காக வலைவீசிக் கொண்டிருக்கிறேன்.
முதல் படம் என்பதால் நிறைய ஹோம் ஒர்க் செய்வதுபோல் தெரிகிறதே?
இயக்கத்தைப் பொறுத்தவரை எனக்கு ஹோம் ஒர்க் தேவையில்லை. ஆனால், இந்தப் படத்தின் கதாநாயகன், காட்டுப் பகுதிகளில் ஆயுதங்களை ஏந்திக்கொண்டு ஓடும் சூப்பர் ஹீரோ. அதற்காக டம்மி ஆயுதங்களை வைத்துக்கொண்டு தினமும் என் வீட்டில் காலையும் மாலையும் 3 மணி நேரம் சில உடற்பயிற்சிகளைச் செய்கிறேன். படப்பிடிப்பு தொடங்கும்போது கத்தி மாதிரி என் உடல் இளைத்திருக்க வேண்டும். எனது படத்தின் கதாநாய கனை அப்படித்தான் கற்பனை செய்து வைத்திருக்கிறேன்.
அரசியல் அவதாரத்தை மூட்டை கட்டி வைத்துவிட்டீர்களோ?
(பலமாக சிரிக்கிறார்) அப்படியெல்லாம் முடிவெடுத்து விடாதீர்கள். இப்போதைக்கு அரசியல்ரீதியாக பேசவோ, செயல்படவோ எதுவும் இல்லை என்பதால் அமைதியாக இருக்கிறேன். ஆனால், தமிழக அரசியல் தொடங்கி அமெரிக்க அதிபர் தேர்தல் வரை அனைத்து அரசியல் நிகழ்வுகளையும் உன்னிப்பாக கவனித்துக்கொண்டுதான் இருக்கிறேன்.
முக்கிய செய்திகள்
சினிமா
2 mins ago
சினிமா
54 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
23 hours ago