ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் ‘ஃபர்ஹானா’ போஸ்டர் வெளியீடு

By செய்திப்பிரிவு

ஐஸ்வ்ரயா ராஜேஷ் நடிக்கும் 'ஃபர்ஹானா' படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது.

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புதிய படம் 'ஃபர்ஹானா’. இந்தப் படத்தை 'ஒரு நாள் கூத்து', 'மான்ஸ்டர்' படங்களை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் இயக்குகிறார். இந்தப் படத்தில் இயக்குநர் செல்வராகவன், 'ஜித்தன்' ரமேஷ், கிட்டி, அனுமோல், ஐஸ்வர்யா தத்தா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். 'பண்ணையாரும் பத்மினியும்', 'மான்ஸ்டர்' படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த கோகுல் பினாய் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.

ஜஸ்டின் இசையமைக்கும் படத்திற்கு, 'தேசிய விருது' பெற்ற சாபு ஜோசப் படத்தொகுப்பு செய்கிறார். கவிஞர் மற்றும் எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன் இத்திரைப்படத்தின் வசனங்களை எழுதியுள்ளார். படத்தின் திரைக்கதையை இயக்குநர் நெல்சனுடன் இணைந்து கதாசிரியர்கள் சங்கர் தாஸ் மற்றும் ரஞ்சித் ரவீந்திரன் எழுதியுள்ளனர்.

படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. அக்டோபர் 7-ம் தேதி ஃபர்ஹானா படத்தின் முதல் பாடல் வெளியாகவுள்ளது. அனைத்து பணிகளும் முடிவடைந்து படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE