நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருந்து வரும் படம் 'அச்சம் என்பது மடமையடா'. சிம்பு, மஞ்சிமா மோகன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இப்படத்தை கெளதம் மேனன் இயக்கியிருக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார்.
இப்படம் குறித்து 10 தகவல்கள்:
* நட்பாக பழகும் நாயகனும், நாயகியும் ஒரு கட்டத்தில் எதிர்பாராத சம்பவத்தில் சிக்கிக்கொள்கிறார்கள். அதிலிருந்து இருவரும் எப்படி வெளியே வந்தார்கள் என்பது தான் 'அச்சம் என்பது மடமையடா'. "பயத்தைப் பார்த்து நம்ம ஓடக் கூடாது. பயம் தான் நம்மைப் பார்த்து ஓட வேண்டும்" என்கிற வார்த்தைத் தான் இக்கதையின் ஆரம்பப் புள்ளி.
* இதுவரை கெளதம் மேனன் இயக்கத்தில் வெளிவந்த படங்களில் 'அச்சம் என்பது மடமையடா' படம் தான் கமர்ஷியல் பாணியில் அமைந்திருக்கிறது. அதிலும் கதையை மீறிய கமர்ஷியல் விஷயங்கள் இல்லாமல் பார்த்துக் கொண்டது படக்குழு.
* முதலில் பல்லவி சுபாஷ் நடிக்க இப்படம் தொடங்கப்பட்டது. ஆனால், 'என்னை அறிந்தால்' படம் முடித்துவிட்டு திரும்புவதற்குள், பல்லவி சுபாஷ் நாடகத்தில் பிஸியான நடிகையாகிவிட்டார். இதனால் படக்குழு மஞ்சிமா மோகனை ஒப்பந்தம் செய்து, முழுமையாக மறுபடியும் காட்சிப்படுத்தி இருக்கிறது.
* இப்படத்தின் முதல் பாதியிலேயே 5 பாடல்கள் இடம்பெற்றிருக்கிறது. இரண்டாம் பாதியில் பாடலே கிடையாது. பாடல் வைப்பதற்கு இடமேயின்றி, கதை வேகமாக நகர்ந்ததால் பாடலே வேண்டாம் என்று கெளதம் மேனன் முடிவு செய்ய, சிம்புவும் சம்மதம் தெரிவித்திருக்கிறார்.
* ஒரு பாடலின் டியூனை விமானத்திலேயே தயார் செய்து, கெளதமுக்கு அனுப்பி இருக்கிறார். நான் விமானத்திலிருந்து இறங்கியவுடன் இப்பாடலை முடித்துவிடலாம். பாடலாசிரியர் தாமரையிடம் கொடுத்து பாடல் வரிகளை முடித்து வையுங்கள் என்று கூறியிருக்கிறார். அந்த டியூன் கடினமாக இருந்ததால் தாமரைக்கு புரியவில்லை. இறுதியில் கெளதம் மேனன் உட்கார்ந்து அந்த டியூனை புரியவைத்து, தாமரை பாடல் வரிகளை எழுதியிருக்கிறார். அது தான் 'தள்ளிப் போகாதே' பாடல்.
* இப்படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி சண்டைக்காட்சி படப்பிடிப்பில், சிம்புவுக்கு மூக்கில் அடிபட்டது. ஆனால், அதையும் மீறி முழுப்படப்பிடிப்பையும் முடித்துவிட்டு கிளம்பியிருக்கிறார். வேறு ஒரு நடிகராக இருந்தால் கண்டிப்பாக படப்பிடிப்பு தடைப்பட்டு இருக்கும் என்கிறது படக்குழு.
* 'தள்ளிப் போகாதே' பாடல் படப்பிடிப்பு 7 நாட்கள் திட்டமிட்டு பாங்காக்கிற்கு சென்றார்கள். ஆனால், 2 நாட்களில் மொத்தப் பாடலையும் முடித்துக் கொடுத்திருக்கிறார் சிம்பு.
* இடைவேளைக்குப் பிறகு வரும் ஒரு முக்கியமான காட்சிக்கு டப்பிங் பண்ணும் போது கெளதம் மேனனை கட்டிப்பிடித்து அழுதுவிட்டார் சிம்பு. ஒரு அரை மணி நேரம் இடைவெளி கொடுங்கள் என கூறிவிட்டு, அதிலிருந்து மீண்டு வந்து டப்பிங் முடித்துக் கொடுத்திருக்கிறார்.
* 'அச்சம் என்பது மடமையடா' தெலுங்குப் பதிப்பிற்கு கிடைத்த பணத்தை வைத்தே இரண்டு படப்பிடிப்பையும் ஒரே சேர முடித்திருக்கிறார் இயக்குநர் கெளதம் மேனன்.
* இப்படத்தின் உரிமையைக் கைப்பற்றி இருக்கிறார் ட்ரைடண்ட் ஆர்ட் ரவி. தமிழகமெங்கும் 500க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியிட இருக்கிறார்கள். ஒவ்வொரு திரையரங்கின் மேலாளரின் குடும்பத்துக்கு தன்னுடைய சொந்தப் பணத்தில் ஆடைகள் அனுப்பி வைத்திருக்கிறார் சிம்பு.
முக்கிய செய்திகள்
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago