ஆரகன் படத்துக்காக குகைக்குள் ஷூட்டிங்

By செய்திப்பிரிவு

ட்ரெண்டிங் ஆர்ட்ஸ் சார்பில் ஹரிஹரன் பஞ்சலிங்கம் தயாரிக்கும் படம் ‘ஆரகன்’. அருண் குமார் இயக்கியுள்ள இந்தப்படத்தில் மைக்கேல் தங்கதுரை, இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட கவிப்பிரியா, ஸ்ரீரஞ்சனி, கலைராணி உள்பட பலர் நடித்துள்ளனர். சூர்யா ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு விவேக்-ஜெஸ்வந்த் இசையமைத்துள்ளனர். படம் பற்றி அருண்குமார் கூறியதாவது:

‘ ஆரகன் என்றால், அழிப்பவன், கெட்டவன் என்று பொருள். இது மிஸ்டரி திரில்லர் படம். ஃபேன்டசியும் இருக்கும். வேலைக்குச் செல்லும் பெண், ஒரு இடத்தில் மாட்டிக்கொள்கிறார். அதிலிருந்து அவரால் தப்பிக்க முடிந்ததா, இல்லையா? என்பதுதான் படம். ஒன்லைன் இப்படி இருந்தாலும் திரைக்கதை புதுமையாக இருக்கும். இந்தப் படத்துக்காக ஏற்காட்டில் யாரும் சென்றிருக்காத குகை ஒன்றில் படப்பிடிப்பை நடத்தியது வித்தியாசமான அனுபவமாக இருந்தது. கயிறு கட்டி மலைமேல் ஹீரோ, ஹீரோயினை ஏற்றிப் படமாக்கினோம். படத்தில் அந்தக் காட்சி முக்கியமானதாக இருக்கும். தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் நடந்து வருகிறது. இவ்வாறு கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

மேலும்