ருத்ரன் ரிலீஸ் தேதி மாற்றம் ஏன்?

By செய்திப்பிரிவு

வெற்றிமாறன் இயக்கிய ‘பொல்லாதவன்', 'ஆடுகளம்', கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய 'ஜிகர்தண்டா' உட்பட பல படங்களைத் தயாரித்தவர் பைவ் ஸ்டார் கதிரேசன். இவர் இயக்குநராக அறிமுகமாகும் படம், ‘ருத்ரன்’.

இதில் ராகவா லாரன்ஸ் நாயகனாக நடிக்கிறார். சரத்குமார், பிரியா பவானி சங்கர், பூர்ணிமா பாக்யராஜ் உட்பட பலர் நடிக்கின்றனர். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இந்தப் படம் வரும் கிறிஸ்துமஸ் அன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், இப்போது அடுத்த வருடம் ஏப்ரல் 14-ம் தேதிக்குத் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி படக்குழு கூறும்போது, ‘‘படத்தின் கிராபிக்ஸ் பணிகள் முடிவடைய இன்னும் சில மாதங்கள் தேவைப்படுவதால், ராகவா லாரன்ஸின் ‘காஞ்சனா’ வெளியான ஏப்ரல் 14ம் தேதி வெளியிடுகிறோம்’’ என்று தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

58 mins ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

மேலும்