சென்னை: வெந்து தணிந்தது காடு படத்தில் இடம்பெற்றுள்ள ஹிட் பாடலான ‘மல்லிப்பூ’ பாடலின் வீடியோவை வெளியிட்டுள்ளது படக்குழு. இந்தப் பாடல் ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்றிருந்தது. அதற்கு முக்கியக் காரணம், பாடலை பாடி இருந்த பின்னணி பாடகர் மதுஸ்ரீயின் குரல் தான்.
நடிகர் சிலம்பரசன் நடிப்பில் கடந்த 15-ம் தேதி அன்று வெளியானது இந்த திரைப்படம். இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கி இருந்தார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து இருந்தார். அனைத்து பாடல்களையும் தாமரை எழுதி இருந்தார்.
மொத்தமுள்ள 5 பாடல்களில் ஒன்று ‘மல்லிப்பூ’. சுமார் 4.05 நிமிடம் டைம் டியூரேஷன் கொண்ட பாடல். வேலை நிமித்தமாக பிரிந்துள்ள கணவனை நினைத்து மனைவி ஏக்கத்துடன் பாடும் பாடல். இந்தப் பாடலை நடன இயக்குநர் பிருந்தா இயக்கி இருந்தார். பாடல் வெளியானபோதும், படத்தில் வெளியான போதும் அமோக வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், படக்குழு இப்போது அதனை வெளியிட்டுள்ளது. ஒன்றாக இணைந்து உணவகம் ஒன்றில் பணிபுரியும் ஊழியர்கள் இணைந்து ஆட்டம் ஆடினால் எப்படி இருக்கும் என்பதை யதார்த்தமாக சொல்லும் வகையில் இந்த பாடல் அமைந்துள்ளது.
மல்லிப்பூ வீடியோ பாடல் லிங்க்..
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago