சிவா இயக்கும் 'சூர்யா 42' படப்பிடிப்பு தளத்தின் வீடியோக்களையும், புகைப்படங்களையும் வெளியீடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என படக்குழு எச்சரித்துள்ளது.
'அண்ணாத்த' படத்திற்கு பிறகு சிறுத்தை சிவா இயக்கும் தலைப்பிடப்படாத புதிய படத்தில் நடிக்கிறார் சூர்யா. 'சூர்யா42' என அழைக்கப்படும் இப்படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. பிரமாண்டமாக உருவாகும் இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பட்டாணி நாயகியாக நடிக்கிறார். 10 மொழிகளில் 3டி தொழில்நுட்பத்துடன் வெளியாக உள்ள படத்தின் மோஷன் போஸ்டர் அண்மையில் வெளியானது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது.
படப்பிடிப்பு தளத்தில் வீடியோக்களையும், புகைப்படங்களையும் சிலர் பகிர்ந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் இது தொடர்பாக படக்குழு தரப்பிலிருந்து அறிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. அதில், ''அனைவருக்கும் ஒரு கனிவான வேண்டுகோள். சூர்யா நடித்து வரும் 'சூர்யா42' படப்பிடிப்பு தளத்தின் புகைப்படங்கள், வீடியோக்களை சிலர் வெளியீட்டு வருவதாக அறிகிறோம்.
» “ஓடிடியாக இருந்தாலும் திரையரங்காக இருந்தாலும் பார்முலா தேவை” - இயக்குநர் சிம்புதேவன்
» ‘அஜித், விஜய் இருவரையும் வைத்து படம் இயக்கத் தயார்’ - வெங்கட் பிரபு
ஒவ்வொரு சின்னஞ்சிறிய பணியிலும் படக்குழுவின் வியர்வையும், ரத்தமும் கலந்திருக்கிறது. இந்தப் படத்தை ஒரு சர்ப்ரைஸ் கிப்டாகவும், பிரமாண்டமான திரையனுபவமாகவும் பார்வையாளர்களுக்கு வழங்க நாங்கள் விரும்புகிறோம். ஆகவே, அப்படி எடுக்கப்பட்ட படப்பிடிப்பு தளத்தின் புகைப்படங்களையும், வீடியோக்களையும் நீங்கள் டெலிட் செய்வது எங்களுக்கு செய்யும் மிகப் பெரிய உதவி.
மேலும், இதனை எதிர்காலத்தில் வெளியில் யாருக்கும் பரப்பாமல் இருக்கவும் கேட்டுக்கொள்கிறோம். அதேசமயம் இதுபோன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருபவர்கள் மீது பதிப்புரிமை மீறலின் (copyright infringement) அடிப்படையில் சட்டரீதியாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்'' என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
22 hours ago