சிம்புவுக்கு கார்..கௌதம் வாசுதேவ் மேனனுக்கு புல்லட் - ஐசரி கணேஷ் பரிசு

By செய்திப்பிரிவு

'வெந்து தணிந்தது காடு' வெற்றியைக் கொண்டாடும் வகையில் படத்தின் தயாரிப்பாளர் ஐசரிகணேசன் நடிகர் சிம்புவுக்கும், இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனுக்கும் கார், புல்லட் வாகனங்களை பரிசளித்துள்ளார்.

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் கடந்த செப்டம்பர் 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் 'வெந்து தணிந்தது காடு'. சித்தி இத்னானி நாயகியாக நடித்திருந்த இப்படத்தை ஐசரிகணேசன் தயாரித்திருந்தார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் 'மல்லிப்பூ' பாடல் பட்டித்தொட்டியெங்கும் பட்டையை கிளப்பி வருகிறது.

படம் வெளியான 4 நாட்களில் ரூ.50 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. இரண்டாவது வாரமாக திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படத்தின் வெற்றிக்கொண்டாட்டம் நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் சிம்பு, கௌதம் வாசுதேவ் மேனன், சிவகார்த்திகேயன், விடிவிகணேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்நிலையில் படம் வெற்றிபெற்றதை கொண்டாடும் வகையில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் நடிகர் சிம்புவுக்கு சொகுசு கார் ஒன்றை பரிசளித்தார். 'டொயாடோ வெல்ஃபையர்' என்ற இந்த காரின் மதிப்பு ரூ.93 லட்சம் என கூறப்படுகிறது. அதேபோல, படத்தின் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனுக்கு ராயல் என்ஃபீல்ட் வண்டி ஒன்றையும் பரிசளித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

43 mins ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

மேலும்