‘வான்டெட்’, ‘ரடிவு ரத்தோர்’, ‘வில்லு’, ‘எங்கேயும் காதல்’னு படங்களோட டைரக்ஷன் வேலையில இருந்தப்போ நடனத்தில் பெருசா நான் கவனம் செலுத் தலை. இந்தப் படங்கள்ல ஒரு பாட்டு... இல்லைன்னா ஒரு சின்ன பிட்டுலன்னு நடனம் ஆடிட்டுப் போயிருப்பேன். அவ் வளவுதான். இந்த நேரத்துலதான் திடீர்னு ஒரு நாள் ஹிந்தி டைரக்டர் ரெமோ, ‘‘பிரபு சார், உங்களை சந்திக்கணுமே!’’ன்னு சொல்லிட்டு என்னைப் பார்க்க வந்தார். வந்ததும், ‘‘நான் ஒரு படம் பண்ணப் போறேன். அதில் நீங்க நடிக்கணும்’’னு கேட்டார். என்ன படம்? என்ன சப்ஜெக்ட்? எப்போ ஷூட்டிங்னு எதுவுமே கேட்காம, அவர் மேல இருந்த நம்பிக்கையில ‘‘ஓ.கே!’’ சொன்னேன். அந்தப் படம்தான் ‘எனி படி கேன் டான்ஸ்’ (‘ஏபிசிடி’).
கமிட் ஆனதுக்குப் பிறகுதான் படத் தில் நான்தான் மெயின் ரோல்னு தெரியும். டைரக்டர் ரெமோ கதை சொல்றேன்னு சொன்னபோதுகூட, ‘‘கட்டாயம் சொல் லணும்னா சொல்லுங்க’’ன்னுதான் சொன் னேன். அப்படியும் நான் முழு கதையை யும் கேட்கலை. 2 நிமிஷமோ என்னவோ தான் கதையைப் பற்றி பேசியிருப்போம். அப்போதான் இது டான்ஸ் சப்ஜெக்ட் படம்னு எனக்குத் தெரியும்.
இந்தப் படத்தில் நடிக்கலாம்னு முடி வெடுத்த நேரத்தில் நார்மலா இருந்த என் னோட வெயிட் நாலஞ்சு கிலோ அதிக மாயிட்டு. சாதாரணமா அவ்வளவு போனதே இல்லை. அதிகபட்சம் 70-லிருந்து 72 கிலோவைத் தாண்ட விட மாட்டேன். அந்த டைம்ல 75-லிருந்து 77 கிலோ வரைக்கும் வெயிட் போட்டிருந் தேன். டைரக்ஷன் வேலை அப்படி.
டைரக்டர் ரெமோ படத்தோட வேலை களை ஆரம்பிச்சார். எப்பவும் 30, 40 பசங்களோட டான்ஸ், ரிகர்சல்னு அந்த இடமே பரபரப்பா இருக்க ஆரம்பிச்சுது. நான் முதல் நாள் ரிகர்சலுக்குப் போறப்ப அங்கே 18-லிருந்து 25 வயசுக்குள்ள இருக் கிற பசங்க ஆடிட்டிருந்தாங்க. சின்னப் பசங்களோட எனர்ஜி எப்படின்னு எல் லாருக்குமே தெரியுமே. ஒவ்வொருத் தரும் அவ்வளவு ஃபிட்னஸோட இருந் தாங்க. இவ்வளவுக்கும் அவங்க எல்லா ரும் சர்வதேச அளவில் பல நிகழ்ச்சிகள்ல டான்ஸ் ஆடி கலக்கினவங்க.
பசங்க ஆடிட்டிருக்கிறதைப் பார்த் ததும், ‘‘இவ்வளவு பயங்கரமா ஆடுறாங் களே, நம்மால ஆட முடியுமா?’’ன்னு எனக்கு ஒரு யோசனை. அங்கே நான் போனதும் அவங்கள்லாம் என்னிடம் வந்து, ‘‘சார், நாங்க உங்களோட பயங்கர ஃபேன். உங்களோட ஆடுறதை பெருமையா நினைக்கிறோம்’’னு சொன் னாங்க. ஆனா, நான் மனசுக்குள்ள ‘இன் னுமா இந்த உலகம் நம்மள நம்புது?’ன்னு நினைச்சுக்கிட்டேன். அப்புறம் நான் ‘‘நீங்க ஆடுங்க. உங்களை ஃபாலோ பண்ணி நான் பின்னாடி நின்னு ஆடுறேன்’’னு சொல்லிட்டு, கடைசி வரிசையில நின்னு ரிகர்சல் பார்க்க ஆரம்பிச்சேன்.
ஒண்ணு, ரெண்டு, ஏன் மூணு நாட்கள் அப்படியே ஓடுச்சு. ‘இந்தப் பசங்க இவ் வளவு பயங்கரமா ஆடுறாங்களே. வேற வழியே இல்லை. இவங்களுக்கு இணையா நாம ஆடியே ஆகணு மேன்னு, மனசு முழுக்க அந்த நினைப்பாவே இருந்துச்சு. ரிகர்சல் நாட்கள் ஒவ்வொண்ணா கூடக் கூட 77 கிலோவுல இருந்த என்னோட வெயிட் டும் 76, 75ன்னு குறைஞ்சு ஒரு கட்டத் துல 70 கிலோவுக்கு வந்துட்டேன். வெயிட் எப்படி குறைஞ்சுதுன்னு எனக்கு அப்போ தெரியவே இல்லை. ஒன்றரை மாசத் துக்குப் பிறகு அங்கே இருந்த டான்ஸர்ஸ் முதல் நாள் ரிகர்சல்ல எடுத்த வீடியோவை காட்டினாங்க. அவ்வளவு வித்தியாசம் அப்போதான் எனக்குத் தெரிஞ்சுது. அப்போ குறைஞ்ச அந்த வெயிட்டை தான் இப்போ ‘தேவி’ படம் வரைக்கும் அப்படியே மெயின்டெய்ன் பண்ணிட் டிருக்கேன். எனக்கே தெரியாம என்னை மாத்தி இவ்வளவு ஸ்லிம்மாக்கி நல்ல பேர் வாங்கிக் கொடுத்த படம்தான் ‘ஏபிசிடி’.
படத்தில் பசங்களுக்கு டான்ஸ் கத்துக் கொடுக்கிற ஒரு குருவா நடிச்சிருப்பேன். குரூப்ல இருக்கிற பசங்க எல்லாரும் ஆடி முடிச்சதுக்கு அப்புறம் நான் ஆடுற டான்ஸோட அந்த காட்சி ஃபினிஷ் ஆகணும். அதுதான் இடைவேளை. பாட்டுக்கு பரேஷ் கொரியோகிராஃபர். நல்ல திறமைசாலி. பசங்க எல்லாரும் விதவிதமான ஸ்டைல்ல ஆர்டரா ஆடி னாங்க. ஒரு குரூப் நல்லா ஆடுனாங் கன்னா, அவங்களை விட இன்னொரு குரூப் இன்னும் நல்லா ஆடுறாங்க. இன் னொரு குரூப் நல்லா ஆடுறாங்கன்னா, அந்த குரூப்பைவிட இந்த குரூப் இன்னும் பயங்கரமா ஆடுறாங்க. அந்த குரூப்தான் ஹிப் ஆப் - ஷோவ்ல உலக அளவில் ஏழாவது இடம் பிடிச்சவங்க.
எனக்கு எப்பவுமே ஒரே ஸ்டைல்தான், சினிமா ஸ்டைல். அதுவும் நம்ம ஸ்டைல். அவ்வளவுதான். அந்த மனநிலையோட ஆடுறதுக்குத் தயாரானேன். படத்தோட கேமராமேன், ‘‘சின்னப் பசங்க எல்லா ரும் இந்த மாதிரி வெளுத்து எடுத்துட் டாங்களே. இதுக்கு அப்புறம் பிரபு சார் வரப் போறாரு. ஓ.கே வா?’’ன்னு டைரக்டர் ரெமோகிட்ட கேட்டார். அதுக்கு டைரக்டர் ரெமோ சிரிச்சிட்டே, ‘‘பார்க்கலாமே!’’ன்னு சொன்னார்.
நான் ஸ்பாட்டுக்கு வந்தேன். ஆடின வங்க, அதை பார்த்தவங்க எல்லாரும் சுத்தி நின்னாங்க. நான் மட்டும் அப்போ தனியா ஆடணும். அதுதான் சீக்வென்ஸ். கண்களை மூடிட்டு ஒரு தடவை மன சுலயே ஆடி பார்த்துக்கிட்டேன். டைரக்டர் ரெமோவிடம் ‘‘ரிகர்சல் இல்லாம டேக் போலாமா?’’ன்னு கேட்டேன். அவரும், ‘‘ஓ.கே சார். உங்க இஷ்டம்!’’னு சொன் னார். எங்கங்கே, எப்படி வரப் போறேன்னு நடந்து நடந்து பொசிஷன்ஸ் எல் லாம் சொல்லிட்டேன். நான் என்ன ஆடப் போறேன்? எப்படி ஆடப்போறேன்னு யாருக்கும் தெரியாது.
கேமராமேன் ஆர்வத்தோட பார்த்துக்கிட்டேயிருந்தார். டைரக்டர் ரெமோ மட்டும் சிரிச்சிகிட்டே பார்த்துகிட்டிருந்தார். சவுண்ட் ஸ்டார்ட் ஆச்சு. ஆட ஆரம்பிச் சேன். ஆடும் போது நான் ரிகர்சல் பண்ணி, என் பாடியை டிரெயின் பண்ணினதுனால உடம்பு முழு எனர்ஜியோட ஆட ஆரம்பிச்சுது. எதையும் மறக்காம ஆட ஆரம்பிச்சுது. ஆடும்போது நடு நடுவே என் மூளை வொர்க் ஆகும். அப்போ என்னோட சின்னச் சின்ன ஸ்டைலை போட்டுப்பேன். டான்ஸ் ஆடும்போது உடம்பு தனி, என்னோட மூளை தனி. அப்படித்தான் எனக்கு வொர்க் ஆகும் .
ஒன்றரை நிமிஷம் ஆடி முடிச்சேன். ஒரு சின்ன சைலண்ட். எல்லாரும் கைத் தட்டினாங்க. முக்கியமா கேமராமேன் கைத் தட்டினார். டைரக்டர் ரெமோ சிரிச்சிக்கிட்டே கைத் தட்டியபடியே கேமராமேனிடம் போய், ‘‘இதுதான் பிரபுதேவா!’’ன்னு சொன்னார். அப்போ நான் கேமராமேன் இதுக்கு முன்னாடி என்ன சொன்னார்ங்கிறது தெரியாம அவர்கிட்ட, ‘ஓ.கே-வா, சார்’னு கேட் டேன், டைரக்டர் ரெமோகிட்டயும் கேட் டேன். அதுக்கு அவங்க என்னை பார்த் துட்டு பதில் சொல்லலை? ஏன்..?
- இன்னும் சொல்வேன்…
முக்கிய செய்திகள்
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago