அஜித் என் பார்வையை முற்றிலுமாக மாற்றிவிட்டார் - பைக்கரின் வைரல் பதிவு

By செய்திப்பிரிவு

'அஜித் என் பார்வையை முற்றிலும் மாற்றிவிட்டார். அவர் ஓர் எளிமையான மனிதர் என நடிகர் அஜித்தை தான் சந்தித்தது குறித்து பைக்கர் ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

'ஏகே 61' படப்பிடிப்புக்கு இடையே நடிகர் அஜித் லடாக் உள்ளிட்ட இடங்களுக்கு பயணம் மேற்கொண்டார். அவர் பைக்கில் சுற்றி வரும் வீடியோ, புகைப்படங்கள் உள்ளிட்டவை இணையத்தில் வைரலாகியது. இந்நிலையில் நடிகர் அஜித் அந்த பயணங்களின் போது இளைஞர் ஒருவருக்கு உதவியிருக்கிறார். இது தொடர்பாக அந்த இளைஞர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் சம்பவத்தை பதிவிட்டுள்ளார்.

அதில், "நான் உங்களுக்கு ஒரு கதை சொல்கிறேன். எல்லாமே ஏதோ ஒரு காரணத்துக்காகத்தான் நடக்கும் என்பார்கள். முதன்முறையாக என் பைக் பயணத்தில் எனக்கு டயர் பஞ்சர் ஆகிவிட்டது. நான் அந்த சமயத்தில் உதவி தேடினேன். அப்போது எனது கனவு பைக்கானbmw 1250GSA, என்னை கடந்து சென்றது. நான் அவரை நோக்கி கையை அசைத்து அவரிடம் ஏர் கம்ப்ரஸர் கேட்டேன். அதற்கு அவர் என்னிடம் இருக்கிறது, ஆனால் அது பின்னால் வரும் காரில் தான் உள்ளது. ஒரு 10 நிமிடங்கள் ஆகும் என்றார்.

தொடர்ந்து அவரிடம் நான் பேச்சு கொடுத்தேன். எனது பெயர் மற்றும் வேலையை சொல்லி அறிமுகம் ஆகிக் கொண்டேன். அவரிடம் பெயர் கேட்டபோது அவர், 'நான் அஜித்' என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி என்று கூறினேன். அதன் பின்னர் கொஞ்சம் கூட யோசிக்காமல் பிறகு பைக்கிலிருந்து இறங்கி அவரே எனது பைக்கை சரி செய்தார். அடுத்த இரண்டு மணி நேரம் நாங்கள் பயணிதோம். பின்னர் தயங்கித் தயங்கி உங்களுடன் ஒரு டீ குடிக்கலாமா? அது எனக்கு ஒரு பாக்கியம் என்றேன். அடுத்த டீக்கடையில் டீ குடித்தோம். தொடர்ந்து 10 நிமிடங்களுக்கு மேல் அவரது முந்தைய ரூட் மேப்பைப் பற்றி உரையாடிய பின், நாங்கள் பயணிக்கும் ரூட்டை கேட்டு எங்களுக்கு வாழ்த்து சொல்லிவிட்டு கிளம்பினார்.

நான் இந்த சம்பவத்தைப் பதிவிட இரண்டே காரணங்கள் தான் :

1. மிகப் பெரிய மனிதர் ஒருவர் எந்தவொரு பந்தாவும் இல்லாமல் எளிமையான அணுகுமுறையைக் கொண்டிருந்தார்... அவருடைய ரசிகர்கள், மக்கள் மீது அற்புதமான அன்பைக் கொண்டிருக்கிறார்.

2. எனக்கு அதிர்ஷ்டம் அடித்தது. இந்த நாளை என்னால் மறக்க முடியாது. அவர் எனது பார்வையை முற்றிலும் மாற்றினார்" - என்று குறிப்பிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்