இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், நடிகர் தனுஷ் நடிக்கும், ‘கேப்டன் மில்லர்’ படத்தில் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் சந்தீப் கிஷன் இணைந்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் திரைப்படம் 'கேப்டன் மில்லர்'. இந்தப் படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படம் 1930கள்-40களின் பின்னணியில் எடுக்கப்படும் பீரியட் ஃபிலிமாக உருவாகவுள்ளது. மேலும் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் இப்படம் வெளியாகிறது. இந்தப் படத்திற்கு மதன் கார்க்கி வசனம் எழுதுகிறார். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவில் உருவாகும் இப்படத்திற்கு நாகூரன் படத்தொகுப்பு செய்கிறார். இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் படத்திற்கு இசையமைக்கிறார்.
இந்நிலையில், படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் சந்தீப் கிஷன் இணைந்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. சந்தீப் கிஷணை பொறுத்தவரை லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'மாநகரம்' படத்தின் மூலம் தமிழுக்கு வந்தவர். தெலுங்கின் முன்னணி நடிகரான இவர் தற்போது 'மைக்கேல்' படத்தில் நடித்து வருகிறார். கௌதம் வாசுதேவ் மேனன், விஜய் சேதுபதி நடிக்கும் இப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கு பார்வையாளர்களை கவரும் வகையில் அவர் தற்போது 'கேப்டன் மில்லர்' படத்தில் இணைந்துள்ளார்.
» ‘பிரிவு’ ஒரு வலுவான உணர்வல்லவா? - ‘மல்லிப்பூ’ பாடல் குறித்து கவிஞர் தாமரை
» “என்னால் அனைத்து விமர்சனங்களையும் உள்வாங்க முடியவில்லை” - ‘பிரம்மாஸ்திரா’ இயக்குநர்
முக்கிய செய்திகள்
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago