நடிகர் விஜய்யுடன் 'வாரிசு' படப்பிடிப்பு தளத்தில் நடிகை ராஷ்மிகா எடுத்த செல்ஃபி புகைப்படம் வைரலாகி வருகிறது.
‘பீஸ்ட்’ படத்தைத் தொடர்ந்து வம்சி இயக்கத்தில் தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் வெளியாகும் 'வாரிசு' படத்தில் நடிக்கிறார் விஜய். தில் ராஜு தயாரிக்கும் இப்படத்தில் சரத்குமார், பிரகாஷ்ராஜ், குஷ்பு, ஷ்யாம், யோகி பாபு என ஏராளமான நட்சத்திரப் பட்டாளம் நடித்திருக்கிறது. தமன் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, ஹைதாராபாத்தில் நடைபெற்று வருகிறது.
படத்தின் முதல் பாடல் இந்த வருடம் தீபாவளிக்கு வெளியாகும் என இசையமைப்பாளர் தமன் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் அப்டேட் கொடுத்திருந்தார். இடையில் படத்தின் பாடல் காட்சிகள், படப்பிடிப்பு தளத்தில் விஜய் இருந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி சலசலப்பை ஏற்படுத்தியது. படம் பொங்கலுக்கு திரைக்கு வரும் என கூப்படுகிறது.
இந்நிலையில், ஹைதராபாத்தில் நடைபெற்று வரும் 'வாரிசு' படப்பிடிப்பு தளத்தில் நடிகர் விஜய்யுடன் செல்ஃபி எடுத்து பகிர்ந்துள்ளார் ராஷ்மிகா. இந்தப் புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
30 mins ago
சினிமா
41 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago