ஆமீர்கான் முதல் ரஜினி வரை - ரூ.500 கோடி வசூலைத் தொட்ட நடிகர்கள்

By செய்திப்பிரிவு

இந்திய சினிமாவில் ரூ.500 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டை வசூலித்த நடிகர்களின் பட்டியல் மற்றும் அவர்கள் நடித்த படங்கள் குறித்து பார்ப்போம்.

ஆமீர்கான்: இந்திய திரையுலகில் 'மிஸ்டர் பர்ஃபெக்ட்' என புகழப்படும் நடிகர் ஆமீர்கான் நடிகராகவும், தயாரிப்பாளராகவும் பாலிவுட்டில் கோலோச்சி வருகிறார். அவரது கடந்த கால படங்கள் பட்ஜெட்டில் பெரிய அளவில் சாதனை படைத்திருப்பதை மறுத்துவிட முடியாது. அவர் நடிப்பில் கடந்த 2013-ம் ஆண்டு டிசம்பரில் வெளியான 'தூம் 3' திரைப்படம் ரூ.175 கோடியில் படமாக்கப்பட்டது. ஆனால், அது ரூ.557 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்தது. 2014-ம் ஆண்டு வெளியான 'பிகே' திரைப்படம் ரூ.85 கோடி செலவில் உருவாக்கப்பட்டது. ஆனால், படம் ரூ.850 கோடிக்கும் அதிகமான வசூலை வாரி குவித்தது. 2016-ம் ஆண்டு வெளியான 'தங்கல்' ரூ.70 கோடியில் தயாரிக்கப்பட்டு ரூ.1000 கோடி வரை வசூலித்தது.

சல்மான் கான்: ஆமீர்கானைத் தொடர்ந்து பேக் டூ பேக் ரூ.500 கோடி வசூலித்தது சல்மான் கானின் படங்கள். 2015-ம் ஆண்டு வெளியான 'பஜ்ரங்கி பைஜான்' திரைப்படம் ரூ.90 கோடியில் எடுக்கப்பட்டு ரூ.900 கோடி பட்ஜெட்டை வசூலித்தது. 2016-ல் வெளியான 'சுல்தான்' திரைப்படம் ரூ.145 கோடியில் படமாக்கப்பட்டு ரூ.600 கோடி வசூலை அள்ளியது. 2017-ல் வெளியான 'டைகர் ஜிந்தா ஹை' ரூ.210 கோடி பட்ஜெட்டில் உருவாகி ரூ.560 கோடியை நெருங்கி வசூலித்தது.

பிரபாஸ்: தெலுங்கு நடிகர் பிரபாஸுக்கு 'பாகுபலி' சீரிஸ் படங்கள் பெரிய அளவில் பரவலான அடையாளத்தை பெற்றுக் கொடுத்தன. அந்த வகையில் 2015-ல் வெளியான 'பாகுபலி' படத்தின் முதல் பாகம் ரூ.180 கோடி பட்ஜெட்டில் உருவாகி ரூ.600 கோடியை வசூலித்தது. 2017-ல் வெளியான 'பாகுபலி 2' படம் ரூ.250 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு சுமார் ரூ.1000 கோடி வசூலை எட்டியது.

யஷ்: கன்னட நடிகர் யஷ்ஷூக்கும் 'கேஜிஎஃப்'சீரிஸ் படங்கள் எதிர்பார்க்காத வெற்றியை பெற்றுக்கொடுத்தது. 2018-ல் வெளியான 'கேஜிஎஃப்' முதல் பாகம் பெரிய அளவில் வசூலை குவிக்கவில்லை என்றாலும், 'கே.ஜி.எஃப்2' ரூ.100 கோடியில் உருவாக்கப்பட்டு ரூ.1200 கோடி வரை வசூலித்தது.

ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர்: ராஜமௌலியின் 'ஆர்ஆர்ஆர்' படங்களின் மூலம் ராம்சரணும், ஜீனியர் என்டிஆரும் ரூ.500 கோடிக்கும் அதிகமான வசூலை குவித்த படங்களின் பட்டியலில் இணைகின்றனர். அவர்கள் நடிப்பில் வெளியான 'ஆர்ஆர்ஆர்' ரூ.550 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டு ரூ.1200 கோடிக்கும் அதிகமான வசூலை குவித்தது.

ரஜினி: சூப்பர் ஸ்டார் ரஜனிகாந்த் நடிப்பில் வெளியான '2.0' திரைப்படம் 3டி பிரமாண்டமான முறையில் ரூ.500 கோடியில் படமாக்கப்பட்டது. படம் ரூ.850 கோடியைக் கடந்து வசூலில் சாதனை படைத்தது. தமிழில் அதிகப்பட்ச வசூல் சாதனை நிகழ்த்திய படம் என்ற பெருமையை படம் பெற்றது.

ரன்பீர் கபூர்: ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் 2018-ம் ஆண்டு வெளியான ரன்பீர்கபூரின் 'சஞ்சு' திரைப்படம் ரூ.100 கோடியில் படமாக்கப்பட்டது. படம் வசூலில் ரூ.600 கோடியை எட்டி சாதனை படைத்தது.

ரன்வீர் சிங்: ரூ.215 கோடியில் உருவாக்கப்பட்ட ரன்வீர்சிங்கின் 'பத்மாவத்' திரைப்படம் ரூ.587 கோடி வசூலித்தது. வரலாற்று படமான இதனை சஞ்சய் லீலா பன்சாலி இயக்கியிருந்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்