ஜெயிலர் படப்பிடிப்பு தளத்தில் குட்டி ரசிகையுடன் ரஜினி - வைரலாகும் புகைப்படம்

By செய்திப்பிரிவு

'ஜெயிலர்' படப்பிடிப்பு தளத்தில் தனது குட்டி ரசிகைக்கு நடிகர் ரஜினிகாந்த் ஆட்டோகிராஃப் போட்டுகொடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

'அண்ணாத்த' படத்தைத் தொடர்ந்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் படம் 'ஜெயிலர்'. நெல்சன் இயக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். படத்தில் நடிகை தமன்னா, கன்னட நடிகர் ஷிவ ராஜ்குமார் வஸந்த்ரவி, ஜெய், ரம்யாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. படத்தில் ரஜினி ஜெயிலராக நடிக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் உள்ள ஆதித்யராம் பிலிம் சிட்டியில் படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இங்கு பிரம்மாண்ட ஜெயில் செட் போடப்பட்டுள்ளது. அதில் ரஜினிகாந்த் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்தின் குட்டி ரசிகை ஒருவர் அவரைக் காண ஜெயிலர் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு சென்றிருக்கிறார். இதையறிந்த ரஜினி அவரை நேரில் சந்தித்து அவருடன் சிறிது நேரம் பேசி ஜாலியாக விளையாடி உள்ளார். இதையடுத்து அந்த சிறுமிக்கு ரஜினிகாந்த் தன்னுடைய ஆட்டோகிராஃபை போட்டு பரிசாக கொடுத்துள்ளார். அப்போது எடுத்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

30 mins ago

சினிமா

39 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்