“சமந்தாவுடன் என் டப்பிங் பயணம் முடிகிறது” - பாடகி சின்மயி தகவல்

By செய்திப்பிரிவு

பிரபல பின்னணி பாடகி சின்மயி. பல சூப்பர் ஹிட் பாடல்களைப் பாடியுள்ள இவர், சிறந்த டப்பிங் கலைஞரும் கூட. நடிகைகள் சமந்தா, காஜல், தமன்னா உட்பட பலருக்குத் தமிழ், தெலுங்கில் டப்பிங் பேசி வருகிறார். நடிகை சமந்தாவுக்குத் தெலுங்கில் தொடர்ந்து டப்பிங் பேசி வந்தார்.

’விண்ணைத் தாண்டி வருவாயா’ படத்தின் தெலுங்குப் பதிப்பில், சமந்தாவுக்குப் பின்னணி பேசியது இவர்தான். சமந்தாவின் நடிப்பைப் போலவே பின்னணி குரலும் கவனிக்கப்பட்டது.

இந்தப் படத்தை அடுத்து சமந்தாவுக்குத் தொடர்ந்து குரல் கொடுத்து வந்த சின்மயி, இனிமேல் அவருக்கு குரல் கொடுக்க வாய்ப்பில்லை என்று தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர், ‘‘தெலுங்கு சினிமாவில் டப்பிங் கலைஞராக என் பயணம் முடிவடையும் என்று நினைக்கிறேன். என் சிறந்த தோழி சமந்தா தனது கேரக்டர்களுக்கு அவரே பேசி வருகிறார். அதனால், அவருக்குப் பின்னணி பேசும் வாய்ப்பு எனக்குக் கிடைக்காது. அவருடனான எனது டப்பிங் பயணம் முடிந்துவிட்டது’’ என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

22 hours ago

மேலும்