“எதிர்பாராததை எதிர்பாருங்கள்” - ‘வெந்து தணிந்தது காடு’ இசை வெளியீட்டு விழா குறித்து சிம்பு

By செய்திப்பிரிவு

சிம்புவின் 'வெந்து தணிந்தது காடு' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் 'வேட்டையாடு விளையாடு' படத்தின் இரண்டாம் பாகம் குறித்து அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது. தவிர 'வெந்து தணிந்தது காடு' படத்தின் இரண்டாம் பாகமும் அறிவிக்கப்படலாம் என தெரிகிறது.

இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படம் 'வெந்து தணிந்தது காடு'. ஐசரி கணேசன் தயாரித்துள்ள இப்படத்தில் சித்தி இத்தானி, ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படம் வரும் செப்டம்பர் 15-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று சென்னை பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் பல்கலைகழகத்தில் நடைபெற உள்ளது. இதற்காக பிரமாண்ட செட் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த இசை வெளியீட்டு விழாவில் கௌதம் வாசுதேவ் மேனன், சிம்பு, கமல்ஹாசன், ஐசரி கணேசன் ஆகியோர் ஹெலிகாப்டரிலிருந்து நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு வர உள்ளதாக கூறப்படுகிறது. தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் 'வேட்டையாடு விளையாடு' படத்தின் இரண்டாம் பாகத்தை கமல் முன்னிலையில் கௌதம் வாசுதேவ் மேனன் அறிவிக்கலாம் என கூறப்படுகிறது. அதேபோல, 'வெந்து தணிந்தது காடு' இரண்டாம் பாகமும் அறிவிக்கலாம் என தெரிகிறது.

இதற்கெல்லாம் லீட் கொடுக்கும் வகையில் நடிகர் சிம்பு தனது ட்விட்டர் பக்கத்தில், 'எதிர்பாராததை எதிர்பாருங்கள்' (Expect the unexpected) என பதிவிட்டுள்ளார். இரவு 9 மணி அளவில் படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியாக உள்ளதை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

12 mins ago

சினிமா

2 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்