அருண் விஜய் நடிக்கும் 'சினம்' படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. படம் செப்டம்பர் 16-ம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது.
ஜி.என்.ஆர்.குமரவேலன் இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் திரைப்படம் 'சினம்'. இந்தப் படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக பாலக் லால்வனி நடித்துள்ளார். தவிர, காளிவெங்கட் முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார். அருண் விஜய்யின் அப்பா விஜய்குமார் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஷபிர் இசையமைத்துள்ளார்.
கதை, திரைக்கதை ஆர்.சரவணன் எழுதியுள்ளார். இப்படத்தில் அருண் விஜய் காவல் துறை அதிகாரியாக நடித்துள்ளார். படம் வரும் வரும் செப்டம்பர் 16-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளள நிலையில் தற்போது படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.
ட்ரெய்லர் எப்படி? - படத்தில் விறைப்பான காவல் துறை அதிகாரியாக நடித்திருக்கிறார் அருண் விஜய். க்ரைம் த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள இந்தப் படத்தில், மர்மமான முறையில் நிகழும் தொடர் கொலைகளுக்கான காரணங்களையும், கொலையாளியையும் கண்டறியும் அதிகாரியாக அருண் விஜய் களமிறங்குவதை ட்ரெய்லர் உறுதி செய்கிறது. விசாரணைக் காட்சிகள் சுவாரஸ்யமாக உருவாக்கப்பட்டிருப்பதற்கான நம்பிக்கையை கொடுக்கிறது ட்ரெய்லர்.
» சந்தானம் நடிக்கும் ‘கிக்’ முதல் பார்வை போஸ்டர் வெளியீடு
» கோப்ரா Review: சீறிப் பாயாமல் ஊர்ந்து நெளிந்து ‘அச்சுறுத்தும்’ பாடம்!
இந்த பாணியில் பல படங்கள் வந்திருந்தாலும், 'சினம்' எந்த வகையில் தனித்து நிற்கிறது என்பதை படம் வெளியான பின்புதான் உறுதி செய்ய முடியும். அப்படிப் பார்க்கும்போது படத்தின் ட்ரெய்லர் த்ரில்லர் படத்திற்கான அம்சங்களை கொண்டிருப்பதை உணரமுடிகிறது. அதே அம்சம் திரையிலிருந்தால் 'சினம்' பலனளிக்கும்.
முக்கிய செய்திகள்
சினிமா
33 mins ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
1 day ago