சந்தானம் நடிக்கும் ‘கிக்’ முதல் பார்வை போஸ்டர் வெளியீடு

By செய்திப்பிரிவு

சந்தானம் அடுத்து நாயகனாக நடிக்கும் புதிய படத்திற்கு 'கிக்' என பெயரிடப்பட்டுள்ளது. ஃபார்டியூன் பிலிம்ஸ் ( FORTUNE FILMS ) சார்பில் நவீன்ராஜ் தயாரிப்பில் நடிகர் சந்தானம் நாயகனாக நடிக்கும் திரைப்படம் 'கிக்'. கன்னடத்தில் வெளியான 'லவ்குரு', 'கானா பஜானா' , 'விசில்', 'ஆரஞ்ச்' போன்ற படங்களை இயக்கிய பிரசாந்த்ராஜ் இந்தப் படத்தை இயகுக்கிறார். இதன் மூலம் அவர் தமிழில் இயக்குநராக அறிமுகமாகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெங்களூரில் தொடங்கியது.

தொடர்ந்து சென்னை, பாங்காங்கில் 'கிக்' படத்தின் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது. படத்தில், சந்தானத்தின் ஜோடியாக, 'தாராள பிரபு' படத்தில் நடித்த தான்யா ஹோப் (tanya hope) நடிக்கிறார். தம்பி ராமையா, பிரமானந்தம், செந்தில், கோவை சரளா, மன்சூர் அலிகான், மனோபாலா, Y.G.மகேந்திரன், மொட்டை ராஜேந்திரன், வையாபுரி, முத்துகாளை, ஷகிலா, கூல் சுரேஷ் உள்ளிட்ட பல நடிகர்கள் நடிக்க உள்ளனர்.

இருவேறு விளம்பர நிறுவனத்தில் வேலை செய்யும் நாயகன், நாயகி இருவரும் தொழிமுறை போட்டி காரணமாக எலியும், பூனையுமாக மோதிக்கொள்வதை கதையாக கொண்ட இப்படம், முழு நீள நகைச்சுவை படமாக உருவாக உள்ளது என்று படக்குழு குறிப்பிட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

22 hours ago

மேலும்