தனது தந்தையின் 30 ஆண்டுகளுக்கு முந்தைய படத்தை இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்த இயக்குநர் வினீத் சீனிவாசன் '30 ஆண்டுகளுக்குப் கழித்தும், இன்னும் உறுதியாக உள்ளது' என்று நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
மலையாள இயக்குநர் வினீத் சீனிவாசன் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில், தனது தந்தையும், பழம்பெரும் நடிகர், இயக்குநர், திரைக்கதை எழுத்தாளரான சீனிவாசனின் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். 'மோஷன் பிக்சர்ஸ்' என்ற பத்திரிக்கை ஒன்றில் அட்டைப்படத்தில் தொப்பி, கூலிங்க்ளாஸுடன் காட்சியளிக்கிறார் சீனிவாசன். இந்த படத்தை பதிவிட்டுள்ள வினீத், ''இது 30 ஆண்டுகளுக்கு முன்பு அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும்.
'அக்கரே அக்கரே அக்கரே’ படத்தின் படப்பிடிப்புக்கு பிறகு வீட்டுக்கு வந்த என் தந்தையின் ஷூட்கேஸில் இருந்த ஒரு பத்திரிகையில் இந்த கவர் படத்தைக் கண்டேன். அது அவரது நூலகத்தில் நீண்ட காலமாக வைக்கப்பட்டிருந்தது. இன்று அவருடைய பழைய புத்தகங்களைச் பார்த்துக்கொண்டிருந்தபோது, இது கிடைத்தது. 30 ஆண்டுகளுக்குப் கழித்தும், இன்னும் உறுதியாக உள்ளது'' என பதிவிட்டுள்ளார்.
» ஜெயம் ரவியின் ‘சைரன்’ - வெளியானது மோஷன் போஸ்டர்
» ஒவ்வொரு கெட்டப்பிற்கும் ஓர் உடல்மொழி - ‘கோப்ரா’ சவால்கள் பகிரும் விக்ரம்
1990-ம் ஆண்டு இயக்குநர் பிரியதர்ஷன் இயக்கத்தில் சீனிவாசன் எழுத்தில் மோகன்லால் நடித்த மலையாள திரைப்படம் 'அக்கரே அக்கரே அக்கரே’. இந்தப் படத்தின் மோகன்லாலுடன் இணைந்து சீனிவாசனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். காமெடி - ட்ராமாவாக உருவான இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago