இதுதான் நான் 48: சரியா வரும்னு மனசு சொல்லுச்சு!

By பிரபுதேவா

ரவுடி ரத்தோர்’ படத்துல சிவான்னும், விக்ரம் ரத்தோர்னும் ரெண்டு வேடங்கள்ல அக்‌ஷய்குமார் சார் நடிச்சார். பாட்டு, சில ஸீன்னு முதல் அஞ்சு நாட்கள் சிவா கேரக்டரோட ஷூட்டிங் போச்சு. போன எபிஸோட்ல நான் சொன்ன மாதிரி அந்த முதல் அஞ்சு நாட்களும் அக்‌ஷய் குமார் சார் என்கூட சரியான பிடிப்பு இல்லாம தான் இருந்தார். ஆறாவது நாள் படத் துல ரெண்டாவது கேரக்டரா வர்ற ரத் தோரோட காட்சிகளுக்கான படப் பிடிப்பை மும்பையில இருந்த ஒரு வீட்ல எடுக்கத் தொடங்கினேன். அதுவும் ஒரே ஸீனை நாள் முழுக்க எடுத்தேன். அன்னைக்கு ஷூட்டிங் பேக்-அப் ஆகுறப்போ மணி இரவு 9-க்கும் மேல.

ஷூட்டிங் முடிஞ்சதும் எப்போதும் போல அன்னைக்கும் அக்‌ஷய் சார், ரைட்டர் சிராஜ் அகமதுவை கூப்பிட்டார். ‘என்ன சொல்லப்போறாரோ?’ன்னு சிராஜ் என்னை திரும்பிp பார்த்தார். ‘போய் கேட்டுட்டு வாங்க!’ன்னு சொன் னேன். திரும்பி வந்த சிராஜ், ‘இந்த ஆள் வேற மாதிரி. என்னமா ரசிச்சு ஒவ்வொரு ஷாட்டையும் எடுக்குறார். ஐ லவ் ஹிம்!’னு என்னைப் பத்தி பெருமையா சொன்னதா வந்து சொன்னார். சினிமாவுல எப்பவுமே நம்மை நிரூபிச்சிட்டே இருக்கணும்கிறதுதான் உண்மை. அதுல இருந்து அக்‌ஷய் சாருக்கு என் மேல அவ்வளவு நம்பிக்கை. காலையில ஷூட்டிங் வந்துட்டு, ஈவ்னிங் பேக் - அப் ஆகி போற வரைக்கும் எதுவும் கேட்காம, முதல் பட ஹீரோ மாதிரி நடிச்சு கொடுத்துட்டு போய்டுவார். இவ்வளவுக்கும் அங்கே டைரக்டரா இருந்த என்னைத் தவிர எல்லாருக்குமே நல்லா இந்தி தெரியும்.

‘ரவுடி ரத்தோர்’ படத்துல வர்ற ‘சிக்கினி கமர் பே’ பாட்டு செம ரீச். இப்போ ‘தேவி’ படத்துல வர்ற ‘சல்மார்’ பாட்டு மாதிரி தான். ‘சிக்கினி’ பாட்டோட ஓபனிங்ல, இடையில அங்கங்கே ‘டட்டாங் டங்.. டங்.. டட்டாங்க் டங் டங்’னு ஒரு மியூசிக் பிட் வரும். இங்கே தமிழ்ல வெளியான ‘ஆட்டுக்கார அலமேலு’ படத்துல ஆடு வரும்போதெல்லாம் பின்னணியில வர்ற மியூசிக் பிட்தான் அது. அதை ஞாபகத்துல வச்சு சின்னதா மாற்றம் செஞ்சு சேர்த்ததுதான் அந்தப் பாட்டு.

ஹீரோ, ஹீரோயின் பின்னாடி மூணு பொண்ணுங்க, மூணு பசங்கன்னு நின்னு ஆட பாட்டை ஷூட் பண்ணினோம். அதுவும் ஹீரோ, ஹீரோயின் என்ன கலர் டிரெஸ்ல இருக்காங்களோ, அதே கலர் டிரெஸ்ல அந்த டான்சர்களையும் ஆட வச்சோம். பாட்டோட ஸ்டைல் அண்ணன் ராஜூவோட கொரியோகிராஃப் ஸ்டைல் மாதிரி இருக்கும். ஆமாம். அவனோட ஸ்டைலும், என்னோட ஸ்டைலும் சேர்ந்ததுதான் அந்தப் பாட்டு.

டீம்ல இருந்தவங்க பலரும், ‘ஹீரோ, ஹீரோயின் பின்னாடி ஐம்பது, அறுபது பேர் நின்னு ஆடுற பாட்டு இது. இப்படி மூணு மூணு பேர் நின்னு ஆடுறதெல்லாம் சரியா இருக்குமா?’ன்னு கேள்வி கேட்டாங்க. எனக்கு மட்டும் சரியா வரும்னு மனசு சொல்லுச்சு. அந்த நம்பிக்கையிலதான் அப்படி எடுத்தேன். அந்தப் பாட்டு மாஸ் ஹிட்டாகி எனக்கும், எங்க டீமுக்கும் பெரிய பேர் வாங்கிக் கொடுத்துச்சு. இப்பவும் வட இந்தியா பக்கம் போறப்போ இந்தப் பாட்டு கல்யாண வீடுகள்ல ஓடிக்கிட்டிருக்கும். ‘சிக்கினி’ பாட்டு இந்திய அளவுக்கு கலக்கின பாட்டுன்னே சொல்லலாம்!

ஒரு தடவை மும்பையில இருந்த ஒரு துணிக்கடைக்கு போயிருந்தேன். இப்போ மாதிரி அதுவும் ஒரு தீபாவளி நேரம். ‘ரவுடி ரத்தோர்’ படம் ரிலீஸாகி, அடுத்தப் படத்தோட வேலையில இருந்தேன். அப்போ என்கூட அசிஸ் டென்ஸும் வந்திருந்தாங்க. தூரத்துல நின்னுக்கிட்டு இருந்த ஒருத்தர் வேகமா என்னை நோக்கி வந்தார். திடீர்னு என்கிட்டே வந்து என் கைகளை பிடிச்சு குலுக்கிட்டே, ‘‘தேங்க்ஸ் சார். உங்களால சிங்கிள் ஸ்கிரீன் எல்லாம் இப்போ ரொம்ப நல்லா போகுது”ன்னு சொன்னார்.

அவர் என்ன சொல்ல வர்றார்னு என்னால சரியா புரிஞ்சிக்க முடியலை. அப்புறம் அவரே, ‘‘நான் குஜராத்ல இருக்கேன் சார். அங்கே எனக்கு நாலஞ்சு சிங்கிள் ஸ்கிரீன் தியேட்டருங்க இருக்கு. உங்களோட ‘வான்டட்’ படம் வந்துச்சு. ரொம்ப நாளுக்கு அப்புறம் பல நாட்கள் தியேட்டர் ஹவுஸ்ஃபுல்லா போச்சு. அப்பறம் ‘ரவுடி ரத்தோர்’ வந்துச்சு. திரும்பவும் ஹவுஸ்ஃபுல்லா ஓடிக்கிட்டே இருக்கு. அந்தக் காலம் மாதிரி தியேட்டர்ல விசில் சத்தம், கைதட் டல் எல்லாம் கேட்க முடிஞ்சுது. சந்தோஷமா இருக்கு. ஹேப்பி தீபாவளி சார்!’னு சொன்னார். அதை கேட்டதும், எனக்கு சந்தோஷமா இருந்துச்சு.

அப்போ பக்கத்துல இருந்த என்னோட அசிஸ்டென்ட், ‘‘எவ்வளவு பேரை நீங்க சந்தோஷப்படுத்துறீங்க சார்”னு சொல்லிட்டு ஒண்ணுக்கு பதில் மூணு டிரெஸ்ஸா எடுத்துக்கிட்டார். சிரிச்சிக்கிட்டே நான் அதுக்கு ஓ.கே சொல்லிட்டேன். ‘வான்டட்’, ‘ரவுடி ரத்தோர்’ படங்கள் எல்லாம் கெட்டவனை அழிக்கணும்கிற மெசேஜ் சொன்னதோட, மக்களுக்கு ரொம்பப் பிடிச்ச ஒரு கமர்ஷியல் படமாவும் இருந்துச்சு. சின்ன வயசுல இருந்தே எம்.ஜி.ஆர். சார் படங்கள் அதிகமா பார்த்து, அதை ரசித்து படம் எடுக்கிற வன், நான். எப்பவுமே எம்.ஜி.ஆரோட படங்கள்ல கெட்டவனை அழிக்கிற மெசேஜோட மக்களுக்கு பிடிச்ச மாதிரி பாட்டு, காமெடி, சண்டைங்க எல்லாமே இருக்கும். அந்த மாதிரிதான் என்னோட ஐடியாவும்!

‘ரவுடி ரத்தோர்’ வெற்றிக்குப் பிறகு அந்த ஆண்டு இறுதியில ஒரு விருது வழங்கும் விழா நடந்துச்சு. அதில் ‘ரவுடி ரத்தோர்’ படத்துல சிறப்பா நடிச் சதுக்காக அக்‌ஷய் சாருக்கு ‘ஆக்‌ஷன் ஹீரோ’ன்னு விருது அறிவிச்சாங்க. அங்கே இருந்த எல்லாருமே ஆரவாரத் தோட கைதட்டினாங்க. அக்‌ஷய் சார் மேடைக்கு போனார். ஆனா, அந்த விருதை அவர் வாங்கிக்கலை. அது ஏன்?

- இன்னும் சொல்வேன்...

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்