“பாரதிராஜா தேறி வருகிறார்” - நேரில் நலம் விசாரித்த கவிஞர் வைரமுத்து தகவல்

By செய்திப்பிரிவு

சென்னை: “இயக்குநர் பாரதிராஜா நலமுடன் இருக்கிறார். அவர் விரைவில் மீண்டு வருவார்” என்று கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார்.

சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இயக்குநர் பாரதிராஜாவை கவிஞர் வைரமுத்து இன்று சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: "இயக்குநர் பாரதிராஜா நலமோடு இருக்கிறார். நாளும் நாளும் தேறி வருகிறார். மருத்துவர்கள் நல்ல சிகிச்சையை வழங்கி வருகிறார்கள். அச்சப்படுவதற்கு ஆதாரமில்லை, வதந்தி பரப்புவதற்கு வாய்ப்பே இல்லை.

பாரதிராஜாவின் நெஞ்சில் கொஞ்சம் சளி இருக்கிறது. அது சரிசெய்யப்படும் என்று மருத்துவர் குழு தெரிவித்துள்ளது. நுரையீரலில் நீர் சேர்ந்துள்ளதும் சரிசெய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளனர். பாரதிராஜா நன்றாக பேசுகிறார். நல்ல நிலையில் இருக்கிறார். அவர் விரைவில் மீண்டு வருவார்" என்று அவர் கூறியுள்ளார்.

முன்னதாக, கடந்த ஆகஸ்ட் 24-ம் தேதி திடீர் உடல்நலக்குறைவு காரணமாக இயக்குநர் பாரதிராஜா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

9 mins ago

சினிமா

17 mins ago

சினிமா

49 mins ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்