படங்களை அடுக்கும் ஜெயம் ரவி

By ஸ்கிரீனன்

ஜெயம் ரவி, வெளிவரவுள்ள 'பூலோகம்' படத்தினைத் தொடர்ந்து 'ரோமியோ ஜுலியட்', ஜெயம் ராஜா இயக்கி வரும் படத்தினைத் தொடர்ந்து சுராஜ் இயக்கும் படத்திலும் நடிக்க இருக்கிறார்.

சமுத்திரக்கனி இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான படம் 'நிமிர்ந்து நில்'. அப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

அப்படத்தினைத் தொடர்ந்து 'பூலோகம்' படம் வெளிவருவதற்காக காத்திருக்கிறார். இம்மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கல்யாண் இயக்கியிருக்கும் இப்படத்தில் ஜெயம்ரவிக்கு ஜோடியாக த்ரிஷா நடித்திருக்கிறார்.

தற்போது லட்சுமணன் இயக்கத்தில் 'ரோமியோ ஜுலியட்', மற்றும் அண்ணன் ஜெயம் ராஜா இயக்கும் படத்திலும் நடித்து வருகிறார் ஜெயம் ரவி. ஜெயம் ராஜா இயக்கி வரும் படத்தின் படப்பிடிப்பு பெருமளவு முடிந்து விட்டது. 'ரோமியோ ஜுலியட்' படப்பிடிப்பு தற்போது தான் ஆரம்பித்திருக்கிறார்கள்.

இந்நிலையில் சுராஜ் இயக்கும் அடுத்த படத்தில் நடிக்க திட்டமிட்டு இருக்கிறார் ஜெயம் ரவி. இப்படத்தினை லட்சுமி மூவி மேக்கர்ஸ் தயாரிக்க இருக்கிறது. தமன் இசையமைக்க இருக்கிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

47 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

4 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்