‘ரெமோ’ படத்தில் தனது ஆடை வடிவமைப்புக்கு கிடைத்த வரவேற்பை அடுத்து மோகன் ராஜா, சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவாகும் புதிய படம், இயக்குநர் ரமணாவின் அடுத்தப்படம் என்று பரபரப்பாக இயங்கத் தொடங்கியுள்ள ஆடை வடிவமைப்பாளர் அனு பார்த்தசாரதியை சந்தித்தோம்.
“18 வருஷங்களுக்கு முன்னாடி பி.சி.ஸ்ரீ ராம் சாரோட விளம்பரக் கம்பெனியில் ஒரு உதவியாளரா வேலைக்குச் சேர்ந்தேன். அவர் கேமராமேனா வேலை பார்த்த படத்தில் இன்னைக்கு எனக்கு வாய்ப்பு கிடைச்சது. அதை சரியா பயன்படுத்தி இருக்கோம்னு நினைக்கும்போது ரொம்ப சந்தோஷமா இருக்கு. ‘ரெமோ’ படத்தின் ஆடை வடிவமைப்புக்கு கிடைத்த பாராட்டுகளுக்கு என் டீமில் இருந்த டைலர் தொடங்கி ஒவ்வொரு உதவியாளரின் உழைப்பும் முக்கிய காரணம்” என்றபடி பேசத் தொடங்கினார் அனு பார்த்தசாரதி.
‘ரெமோ’வில் சிவகார்த்திகேயனை பெண் பாத்திரத்துக்கு வடிவமைக்கும்போது உங்களுக்கு இருந்த சவால் என்ன?
ஒரு ஆணை, பெண் பாத்திரமாக மாற்றும்போது அவரது உடையில் எந்த இடத்திலும் அளவுக்கு அதிகமான ரிச்னஸை காட்டிவிடக்கூடாது. அது மொத்த உடல்மொழியையும் கெடுத்துவிடும். இந்தப் படத்தில் சிவா அணிந்திருந்த நர்ஸ் உடையில இருந்து சேலை, நைட்டி இதெல்லாமே சிம்பிளாகத்தான் இருக்கும். ரசிகர் களின் கண்களை எந்த இடத்திலும் உறுத்தியிருக்காது. அதற்கு முக்கிய காரணம் அந்த கதாபாத்திரம் வெளியே அணிந்திருந்த ஆடைக்குப் பொருத்தமான ‘இன்னர் லேயர்’ வடிவமைப்புத்தான். அதை சரியாக வடிவமைப்பதில் எங்களுக்கு நிறைய சவால்கள் இருந்தன. பாலிவுட் மேக்கப் டிசைனர் சீன் ஃபுட் அதற்கு ரொம்பவே உதவியாக இருந்தார்.
சிம்ரன், ஜோதிகா போன்ற நாயகி களோடு பணியாற்றியவர் நீங்கள். அந்தக் காலகட்டத்துக்கும், இன்றைய காலகட் டத்துக்கும் உள்ள வித்தியாசம் என்ன?
சிம்ரன், ஜோதிகா போன்ற நாயகிகளின் காலகட்டத்தில் அதிக அளவுக்கு அரங்குகள் அமைத்து எடுக்கும் பாடல்கள் தொடர்ச்சியாக வந்தன. அப்போது உடைகளுக்கு அதிகமான நிறங்களைக் கொடுத்து வேலை பார்த்தோம். இன்றைக்கு வெளிவரும் படங்கள் பெரும்பாலும் எதார்த்தம் நிறைந்ததாக இருக்கிறது. முன்பு கொடுத்த அளவுக்கு இப்போது உடைகளுக்கு நிறைய நிறங்கள் தேவையில்லை. காலகட்டத்துக்கு ஏற்ப மாற வேண்டும். கதைக்கு ஏற்றார் போல் உடைகளை அமைப்பதுதான் ஒரு ஆடை வடிவமைப்பாளரின் வேலை. அதுதான் படத்தின் வெற்றிக்கும் துணைநிற்கும். நடிகர், நடிகைகள் விரும்புகிறார்கள் என்று ஆடைகளை வடிவமைக்க கூடாது. இந்த மாற்றம்தான் இங்கே வித்தியாசம்.
மணிரத்னம், ஷங்கர், எஸ்.ஜே.சூர்யா போன்ற முன்னணி இயக்குநர்களின் படங்களில் பணியாற்றிய நீங்கள் வர லாற்று பின்னணி கொண்ட படங்களில் கவனம் செலுத்தவில்லையே?
அதுபோன்ற களத்தோடு இதுவரை என்னை யாரும் அணுகவில்லை. ‘வாலி’, ‘பஞ்ச தந்திரம்’, ‘ஆடுகளம்’, ‘டும் டும் டும்’, ‘காஞ்சனா 2’ போன்ற படங்களில் பணிபுரிந்தபோது எதார்த் தம் கலந்த கமர்ஷியல் பின்னணியில் தான் வேலை பார்த்தோம். ‘அனேகன்’ படத்தில் 1962 காலகட்டத்தையும், 1980- களின் காலகட்டத்தையும் பிரதிபலிக் கும் சூழல் அமைந்தது. முழு நீள வர லாற்று படத்தில் பணியாற்றவில்லையே தவிர வரலாற்று களம் கலவையாக வரும் படங்களில் பணிபுரிந்தே வருகிறோம்.
முன்பெல்லாம் படத்தில் நாயகன், நாயகி கள் அணிந்து வரும் ஆடைகள் மக்களிடம் எளிதாக போய் சேர்ந்தன. அதே மாதிரி ஆடைகளை வாங்கி அவர்கள் அணியவும் செய்தார்கள். இன்றைக்கு அந்த சூழல் இல்லையே?
சரோஜாதேவி, கே.ஆர்.விஜயா, வாணி போன்ற நடிகைகள் இருந்த காலகட்டத்தில் அவர்கள் பெரும்பாலும் சேலையில்தான் வந்து செல்வார்கள். இங்கே பெரும்பாலான பெண்கள் அணியும் உடையாகவும் சேலைதான் இருந்தது. இன்றைக்கு அப்படி இல்லை. ஆடைகளின் வடிவங்கள் மாறியிருக்கின்றன. இந்த சூழ்நிலையில் ஒரு படத்தில் வரும் உடையைத் தேர்வு செய்வதற்குள் அடுத்து புதிய மாடல்கள் வந்த வண்ணம் இருக்கிறது. சேலை எல்லா தரப்பு பெண்களும் விரும்பும் உடை. ஆனால் மாடர்ன் உடைகள் அப்படி இல்லை. அந்தந்த காலகட்டத்துக்கு ஏற்றாற்போல ஒவ்வொரு விஷயமும் மாறுவதைப்போலத்தான் இதையும் நாம் பார்க்க வேண்டும்!
உங்கள் அப்பா ‘வியட்நாம் வீடு’ சுந் தரம், கணவர் பார்த்தசாரதி ஆகிய இரு வருமே எழுத்து, புகைப்படம் என்று ஊட கம் மற்றும் சினிமா பின்னணியைச் சேர்ந் தவர்கள். உங்கள் பணிக்கு இவர்கள் எந்த வகையில் உதவியாக இருந்தார்கள்?
என் கணவரின் ஒத்துழைப்பு இல்லையென்றால் கடந்த 18 வருஷமாக இந்த துறையில் என்னால் பயணித்திருக்க முடியாது. அப்படி ஒரு ஊக்கத்தை அனுதினமும் அளித்து வருகிறார். அப்பா மருத்துவமனையில் இருந்தபோது ‘ரெமோ’ படத்தின் ‘பர்ஸ்ட் லுக்’ போஸ்டரைக் காட்டினேன். மிகவும் பாராட்டினார். அவர் முழு படத்தைப் பார்க்கணும்னு ஆசைப்பட்டேன். பார்த்திருந்தால், என்னைப் பாராட்டிக் கிட்டே இருந்திருப்பார்.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago