‘‘இரண்டு கதாபாத்திரம், மூன்று கெட்டப், முதன்முறையாக வரலாற்றுப் பின்னணிக் கொண்ட 30 நிமிடக் கதைக் களம் என்று ‘காஷ்மோரா’ படத்தில் எனக்குக் கிடைத்த புதுமையான அனுபவங்களை விட்டு வெளியே வர நீண்ட நாட்கள் ஆனது. ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தை முடித்துவிட்டு ‘பையா’ படத்துக்குள் சென்றபோது எப்படியான மனநிலையில் இருந்தேனோ, அதேபோலத்தான் ‘காஷ்மோரா’ படத்தை முடித்துவிட்டு இப்போது மணிரத்னம் சாரோட ‘காற்று வெளியிடை..’ படத்துக்குள்ளே நுழைந்திருக்கிறேன்!’’ என்கிறார், கார்த்தி.
லடாக்கில் நடைபெற்று வரும் ‘காற்று வெளியிடை...’ படப்பிடிப்பில் கலந்துகொண்ட புத்துணர்ச்சியோடு தீபாவளி ரிலீஸாக திரைக்கு வரும் ‘காஷ்மோரா’ பற்றி பேசத் தொடங்குகிறார், கார்த்தி.
காமெடி, காதல் களத்தின் பின்னணி யில் படமெடுத்த இயக்குநர் கோகுல், ஒரு வரலாற்றுப் பின்னணியான கதையை சொல்லும்போது அந்தக் களம் எப்படி ஏற்றுக்கொள்ளும்படி யாக இருந்தது?
இயக்குநர் கோகுலை சந்திப்ப தற்கு முன்பே அவரோட ‘இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பால குமாரா’ படத்தை பார்த்திருந்தேன். திரைக்கதையில் ஹூமரும், ஜாலி யும் அந்த அளவுக்கு மிதந்தது. ஒரே படத்தில் ஆறு வித்தியாசமான கதாபாத்திரங்களை வைத்து மூன்று கதைகளை அவ்வளவு அழகாக சொல்லியிருப்பார். கண்டிப்பா இந்த இயக்குநர்கிட்ட தெளிவான பார்வை இருக்கும் என்ற நம்பிக்கையை அந்தப் படம் ஏற்படுத்தியது. ‘காஷ்மோரா’ படத் தின் கதையை என்னிடம் சொல்ல வந்தபோதும் மூன்று கெட்டப் கதை யையும் ஒவ்வொன்னா வெவ் வேறு சந்தர்ப்பத்துல வந்து சொன் னார். கதை சொல்லும்போது அவரே நடித்து காட்டுவார். அதுவும் ரொம்பவே பிடிச்சிருந்தது. இதில் நான் ராஜ் நாயக், காஷ் மோரா இந்த இரண்டு கபாத்திரத் தில் வருவேன். படத்தில் பொழுது போக்கு, ஆக்ஷன், சஸ்பென் ஸோடு அவ்வளவு ஜாலி இருந் தது. இதை மிஸ் பண்ண வேண் டாம்னு தோணுச்சு. அப்படித்தான் நாங்க ரெண்டு பேரும் இந்தப் படத்துக்குள்ள வந்தோம்.
பொதுவாகவே ஃபேன்டஸி வகை கதையை எழுதும்போது ஒரு வடிவத் திலும் அதை திரை மொழியாக மாற் றும்போது வேறொரு வடிவத் திலும் இருக்குமே. இந்த பட அனுபவம் எப்படி?
55 கோடிக்கும் மேலான பட்ஜெட் படம். தளபதி ராஜ் நாயக் என்ற என்னோட ஒரு கதாபாத்திரத்துக்கு மொட்டை அடித்து தாடி வைக்க வேண்டும். இயக்குநர் அதுக்கு ஆறு வகையான தாடியை வர வழைத்தார். இப்படி ஒவ்வொரு விஷயத்தையும் அதிக நேரம் எடுத் துகிட்டு வேலை பார்க்கிற சூழலை இயக்குநர் உருவாக்கிக்கிட்டார். இந்தப் படம் எதிர்பார்க்கிற விதத் துல உருவாகும்கிற நம்பிக்கை அப்பவே எனக்கு வந்தது. அதே மாதிரி கிங்க்டம், தர்பார், சிம்மாசனம், ஆர்மெர், குதிரை யோட பயணிக்கிற காட்சிகள்னு ரொம்பவே வித்தியாசமான அனுபவமாக அமைந்தது. இயக்கு நர் கோகுலோடு கேமராமேன் ஓம் பிரகாஷும் இணைந்து சிறப்பான பங்களிப்பை கொடுத்திருக்கார். வரலாற்றுப் பின்னணிக் கொண்ட படத்தில் நடிப்பதும் ஒரு சுகம்தான்.
நயன்தாரா, திவ்யான்னு கலகலப் பான கூட்டணியாக இருக்கே?
ஹீரோவுக்கு இணையான ரோல் நாயகி நயன்தாராவுக்கு. ரத்னமாதேவி என்ற ரோல். காஸ்ட்யூம்ல இருந்து சின்னச் சின்ன அணிகலன்கள், கலர்ஸ் வரைக்கும் அவங்களே முழு ஈடுபாட்டோட தேர்ந்தெடுத்தாங்க. அவங்களுக்கு சண்டைக் காட்சி களும் இருக்கு. அதே மாதிரி திவ்யா இந்தப் படத்துல மாடர்ன் ஜர்னலிஸ்ட்டா வருவாங்க. ‘இந்தப் படத்துல காதலே இல்லை சார்!’னு கோகுல் சொன்னார். ‘காதல் இல்லாம படமே எடுக்க மாட்டீங்களாப்பா?’ன்னு கேட்குறவங்களுக்கு இந்தப் பதிலை சொல்லிடுவோம்னு அதுக்கும் ஓ.கே சொல்லிட்டு வேலையை ஆரம்பிச்சோம்.
அப்பாவாக நடிக்க விவேக் எப்படி சம்மதித்தார்?
விவேக் சாரோட கதாபாத்திரம் ரொம்பவே சுவாரஸ்யமா இருக் கும். ‘என்னது கார்த்திக்கு அப் பாவா?’ன்னு அவரும் ஆரம்பத்தில் கேட்டிருக்கார். கதாபாத்திரத்தை சொல்லி ‘வாங்க சார்’ன்னு அவரை அழைச்சுக்கிட்டு வந்துட்டோம். சாருக்கு அவ்வளவு நினைவாற்றல். சிவாஜி சார், பாலசந்தர் சார், இளையராஜா சார்னு அத்தனை பேர் பற்றியும் ஷூட்டிங்ல நிறைய பேசியிருப்போம். பல வருஷங் களுக்கு முன்னாடி நான் சின்ன பையனா இருந்தப்போ ஒரு ஸ்கூட் டர்ல எங்க தெரு வழியாத்தான் போவார். அப்போ நேர்ல பார்த்தது. அதுக்கு பிறகு முதன்முறையா இந்தப் படத்துலதான் பார்த்து, ரொம்ப நேரம் பேசிக்கிற வாய்ப்பு அமைந்தது. அவ்வளவு சந்தோஷம்!
ஊட்டி, லடாக் என்று மணிரத்னம் இயக்கத்தில் நீங்க நடித்து வரும் ‘காற்று வெளியிடை..’ படம் விறுவிறு வென வளர்ந்து வருகிறதே?
ஆமாம். கிட்டத்தட்ட 60 சதவீத படப்பிடிப்பு முடிந்தது. படத்தோட பெரும்பகுதி காஷ்மீர், நகர் பின்னணிதான். மணி சார்கிட்ட உதவியாளரா இருந்தப்போ ஏதா வது ஐடியா சொல்ல ஒரு மாதிரி இருக்கும். இந்த பத்து ஆண்டுகளுக்குப் பிறகு இப்போ ஒரு நடிகனா மாறி அவரோட சேர்ந்து வேலை பார்க்கும்போது சின்னச் சின்ன ஐடியா ஏதாவது கொடுக்கும்போது சந்தோஷமா இருக்கும். ஏதோ கொஞ்சம் வளர்ந் திருக்கோம்னு நினைச்சுப்பேன். ஏர்ஃபோர்ஸ், மிலிட்டரி பின்னணி யில் படம் உருவாகி வருகிறது. மணி சார் டீமோட சேர்ந்து பயணிக்கிற ஒவ்வொரு நாள் படப்பிடிப்பும் புதுமையா, இளமையா இருக்கு.
தீபாவளி பரிசளிப்பு, நடிகர் சங்க உறுப்பினர்கள் தகவல்கள் சேகரிப்பு, சங்கக் கட்டிடம் எழுப்புவதற்கான முதல் கட்ட வேலைகள்னு நடிகர் சங்க வளாகம் பரபரப்பாகவே இருக்கிறதே?
நடிகர் சங்க கட்டிட வேலைகள் தொடங்க சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் ஒப்புதலுக் காக காத்திருக்கிறோம். பொருளா ளராக என்னோட பணியைத் திருப்தி யாக செய்து வருவதாகவே நினைக் கிறேன். இந்தப் பொறுப்புக்கு வந்த பிறகு நிறைய புதிய மனிதர்களின் அன்பும், நட்பும் கிடைத்திருக்கிறது. ‘நம்மை சுத்தி இருக்கிறவங்களோட பிரச்சினை என்ன? அவங்களுக்கு என்ன செய்யலாம்னு யோசிச் சுக்கிட்டே இருக்கணும்!’’னு அப்பா அடிக்கடி சொல்லிட்டே இருப்பார். நிறைய தெருக்கூத்து கலைஞர்களிடம் இருந்து கடிதம் வருகிறது. அதில் பலரும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களா இருக்காங்க. அவங்க எல்லோ ருக்கும் ஓய்வூதியம் தொடங்கி பல நல்ல விஷயங்கள் செய் யணும்கிறதை நோக்கி ஓடிக்கிட்டே இருக்கோம்.
முக்கிய செய்திகள்
சினிமா
31 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
1 day ago