சமந்தாவுக்கு தற்காப்புக் கலை பயிற்சி

By செய்திப்பிரிவு

ராஜ் மற்றும் டீகே இயக்கிய ‘தி பேமிலிமேன் 2' வெப் தொடரில் நடித்திருந்தார் சமந்தா. இந்தத் தொடர் மூலம் இந்திக்கும் சென்றார். இதில் சமந்தாவின் நடிப்புக்கு வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து ராஜ் மற்றும் டீகே இயக்கும் மற்றொரு வெப் தொடரிலும் சமந்தா நடிக்கிறார். இதில் இந்தி நடிகர் வருண் தவன் ஹீரோவாக நடிக்கிறார்.

ரூசோ சகோதரர்கள் இயக்கத்தில் பிரியங்கா சோப்ரா உட்பட பலர் நடித்த ‘சிட்டாடல்’ என்ற அமெரிக்க வெப் தொடரின் இந்திய வடிவம், இந்தத் தொடர். அமேசான் தளத்தில் வெளியாக இருக்கும் இத்தொடரில், ஆக்‌ஷனுக்கு முக்கியத்துவம் இருப்பதால், நடிகை சமந்தாவும் வருண் தாவனும் தற்காப்புக் கலை பயிற்சிப் பெறுகின்றனர்.

அமெரிக்காவைச் சேர்ந்த சண்டை இயக்குநர் ஒருவர், பயிற்சி அளித்து வருகிறார். சமீபத்தில் தொடங்கிய இந்தப் பயிற்சி மூன்று மாதம் நடக்கும் என்று கூறப்படுகிறது. ‘‘இது வழக்கமான ஆக்‌ஷன் காட்சிகள் இல்லை. சிலிர்க்க வைக்கும் கடினமான ஆக்‌ஷன் காட்சிகள் என்பதால் அதிகப் பயிற்சி தேவை’’ என்று கூறப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

4 hours ago

சினிமா

48 mins ago

சினிமா

48 mins ago

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

மேலும்