ஆர்யா நடிக்கும் 'கேப்டன்' படத்தின் ட்ரெய்லர் வெளியாகி சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகிறது.
'மிருதன்', 'டிக்டாக்' படங்களின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் சக்தி சௌந்தரரராஜன் அண்மையில் ஆர்யாவை வைத்து 'டெடி' படத்தை இயக்கினார். ரசிகர்களிடையே அந்தப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், மீண்டும் ஆர்யாவுடன் அவர் இணைந்து இயக்கியுள்ள திரைப்படம் 'கேப்டன்'. சயின்ஸ் பிக்சன் படமாக உருவாகும் இதை, ஆர்யாவின் தி ஷோ பீப்பிள் மற்றும் திங் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் தயாரித்துள்ளன. டி.இமான் இசையமைத்துள்ள இப்படத்தில், ஐஸ்வர்யா லக்ஷ்மி, சிம்ரன், ஹரீஷ் உத்தமன், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். செப்டம்பர் 8-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் இப்படத்தை உதயநிதி ஸ்டாலின் வெளியிடுகிறார்.
ட்ரெய்லர் எப்படி? இந்திய ராணுவ அதிகாரியான ஆர்யா ஏலியனிடமிருந்து மக்களை எப்படி காப்பாற்றுகிறார் என்பது தான் படத்தின் ஒன்லைனாக இருக்க வாய்ப்பிருப்பதை ட்ரெய்லர் உணர்த்துகிறது. 30 ஆண்டுகளாக மனிதர்கள், ராணுவம் செல்லாத பகுதிக்குள் ஆர்யா தலைமையிலான குழு நுழையும் போது நடக்கும் அசம்பாவிதங்கள் தான் படம் என்பதை காட்சிகள் விவரிக்கின்றன.
அந்த குறிப்பிட்ட காட்டுக்கு அதீத ஹைப் கொடுக்கும்போதே, உயர் அதிகாரியாக வரும் சிம்ரன் தோன்றி சர்ப்ரைஸ் செய்கிறார். ஏலியன் உருவாக்கம் ஓகே என்றாலும், சில இடங்களில் விஎஃப்எக்ஸ் காட்சிகள் பிசிரு தட்டுகின்றன. எப்படியிலிருந்தாலும் வெள்ளித்திரையில்தான் முழு படத்தையும் கணிக்க முடியும். புதிய கதைக்களத்துடன் பார்வையாளர்களை அணுகவிருக்கிறார்சக்தி சௌந்தரரராஜன் . வித்தியாசமான முயற்சியை திரையில் காண ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.
முக்கிய செய்திகள்
சினிமா
58 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
3 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
1 day ago