மூன்று மாத இடைவெளியில் கமல் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து!

By ஸ்கிரீனன்

ஜூலையில் படப்பிடிப்பு முடிய இருக்கும் 'உத்தம வில்லன்' படத்தினைத் தொடர்ந்து, அந்த மாதமே 'த்ரிஷ்யம்' ரீமேக் படப்பிடிப்பினை தொடங்க திட்டமிட்டு இருக்கிறார் கமல்.

கமல், ஆண்ட்ரியா, பூஜா குமார், இயக்குநர் பாலசந்தர், ஜெயராம் உள்ளிட்ட பலர் நடிக்க ரமேஷ் அரவிந்த் இயக்கி வரும் படம் 'உத்தம வில்லன்'. ஜிப்ரான் இசையமைத்து வரும் இப்படத்தினை திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

தற்போது சன் ஸ்டூடியோஸில் இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு படுதீவிரமாக நடைபெற்று வருகிறது. அடுத்த மாதம் இரண்டாம் வாரத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற இருக்கிறது.

'உத்தம வில்லன்' படப்பிடிப்பு முடிந்தவுடன், ஜூலை மாத இறுதியில் 'த்ரிஷ்யம்' தமிழ் ரீமேக் படப்பிடிப்பு தொடங்க திட்டமிட்டு இருக்கிறார்கள். 'உத்தம வில்லன்' போலவே இப்படத்தினையும் 3 மாதத்தில் மொத்த படப்பிடிப்பினையும் முடிக்க திட்டமிட்டு இருக்கிறார்கள்.

'த்ரிஷ்யம்' ரீமேக்கிற்கான படப்பிடிப்பு இடங்களை தேர்வு செய்யும் பணிகள் தற்போது திருநெல்வேலியில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

செப்டம்பர் மாதத்தில் 'உத்தம வில்லன்' படத்தினையும், அதனைத் தொடர்ந்து டிசம்பரில் 'த்ரிஷ்யம்' ரீமேக்கையும் வெளியிட முடிவு செய்து இருக்கிறார்கள். இரண்டு மாத இடைவெளியில் அடுத்து அடுத்து கமல் படங்கள் வெளிவருவதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

'விஸ்வரூபம் 2' படத்தினைப் பொறுத்தவரை இன்னும் 15 நாட்கள் படப்பிடிப்பு இருக்கிறது. தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரனுக்கு ஏற்பட்டுள்ள பண நெருக்கடியால் நடைபெறாமல் இருக்கிறது. பண நெருக்கடி தீர்ந்து, 'விஸ்வரூபம் 2' படப்பிடிப்பு முடிந்தால் அந்த படமும் இந்தாண்டே வெளிவர வாய்ப்பிருக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

28 mins ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

1 day ago

மேலும்