ஹாலிவுட் நடிகை மெக்கென்சி கேட் வெஸ்ட்மோர் வீட்டுக்குச் சென்றுள்ளார் நடிகர் கமல்ஹாசன்.
நடிகை மெக்கென்சியின் தந்தை பிரபல மேக்கப் ஆர்டிஸ்ட் மைக்கேல் வெஸ்ட்மோர் ஆவார். இவர் கமல்ஹாசனின் பிரமாண்ட படங்களான இந்தியன், அவ்வை சண்முகி மற்றும் தசாவதாரம் போன்ற படங்களில் மேக்கப் ஆர்ட்டிஸ்டாக பணியாற்றியவர். தற்போது இந்தியன் 2 படம் மீண்டும் ஆரம்பிக்க உள்ள நிலையில் தான், மைக்கேல் வெஸ்ட்மோர் வீட்டுக்கே சென்று அவரைச் சந்தித்துள்ளார்.
தற்போது அமெரிக்காவில் முகாமிட்டுள்ள கமல், மைக்கேல் வெஸ்ட்மோரையும் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார். இந்த சந்திப்பை நடிகை மெக்கென்சி தனது வலைதளங்களில் பதிவேற்றியுள்ளார். இது தற்போது வைரலாகி வருகிறது. இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் கமல்ஹாசன் நடிக்க, ஷங்கர் இயக்கிவருகிறார்.
இந்தப் படத்தில் காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் நடிக்க உள்ளனர். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இதற்கான படப்பிடிப்பு கடந்த 2019-ம் ஆண்டு தொடங்கியது. ஆனால், அப்போது ஏற்பட்ட விபத்து காரணமாக படம் நிறுத்தப்பட்டது.
» கங்கனாவின் ‘எமர்ஜென்சி’ அப்டேட்: இந்திரா காந்தியின் தோழி கதாபாத்திரத்தில் மஹிமா சவுத்ரி
» 'டோபாரா' முதல் நாள் வசூல் ரூ.70 லட்சம் மட்டுமே | “பாய்காட் ட்ரெண்ட் ஒரு ஜோக்” - டாப்ஸி
தொடர்ந்து கரோனா, படத்தின் பட்ஜெட் தொடர்பான பிரச்சினைகள் உள்ளிட்ட காரணங்களால் படப்பிடிப்பு தடைப்பட்டது. இதனால் இயக்குநர் ஷங்கர், ராம்சரணை வைத்து இயக்கும் 'RC15' படப்பிடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். இதனிடையே. கமல் நடிப்பில் வெளியான 'விக்ரம்' திரைப்படம் மெகாஹிட் அடித்த நிலையில், 'இந்தியன் 2' படத்தின் பிரச்சினைகள் சரிசெய்யப்பட்டு தற்போது மீண்டும் ஷூட்டிங்கிற்கு ஆயத்தமாகிறது படக்குழு. அந்த வகையில், படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 22-ம் தேதி மீண்டும் தொடங்கவுள்ள நிலையில் தான், மைக்கேல் வெஸ்ட்மோரை சந்தித்துள்ளார் கமல்.
முக்கிய செய்திகள்
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago