‘‘ஒரு படம்போல இல்லாமல் ஜாலியான ஒரு பயணமாக இருந்தது ‘றெக்க’. விஜய் சேதுபதி என்னைக் கடத்துவார். எங்கள் பயணத்தின்போது அவர் மீது எனக்கு காதல் வரும். அது எப்படி என்றால்… இதற்கு மேல் கதையைச் சொன்னால் அவ்வளவுதான்’’ என்று சிரிக்கிறார் லட்சுமி மேனன். ஒவ்வொரு படத்திலும் தன்னை நிலைநிறுத்திக்கொண்டு வருபவர், ‘றெக்க’விலும் அதேபோல களமிறங்கியுள்ளார்.
மலையாளத் திரையுலகில்தான் நடிக்கத் தொடங்கினீர்கள். ஆனால், தற்போது அதில் அதிக கவனம் செலுத்துவதில்லையே.
தமிழிலேயே நல்ல கதையம்சம் உள்ள வாய்ப்புகள் நிறைய வருகின்றன. தமிழ் சினிமாவோடு கலந்துவிட்டேன். அதனால் அதை விடுத்து மற்ற திரையுலக வாய்ப்புகளை ஒப்புக்கொள்வதில்லை. தவிர, மலையாளத் திரையுலகம் வித்தியாசமானது. அங்கு பல படங்களில் நடித்த நடிகைகள் தமிழில் நடிக்க கொஞ்சம் கஷ்டப்படுவார்கள். வித்தியாசமான கதையம்சம் உள்ள படங்கள் வந்தால் மலையாளத்திலும் நடிப்பேன்.
2 படங்களில் பாடினீர்கள். அத்துடன் நிறுத்திவிட்டீர்களே..
நான் பாடுவேன் என்று கனவில்கூட நினைத்தது இல்லை. இமான் சார்தான் நான் பாடியதை எங்கோ கேட்டு, பாட வாய்ப்பு கொடுத்தார். அந்த வாய்ப்பு கிடைத்ததே பெரிய பாக்கியம். அந்த பாடல் மக்களிடையே வரவேற்பு பெற்றிருப்பதில் ரொம்ப சந்தோஷம். என் குரல் எல்லாவிதமான பாடல்களுக்கும் பொருந்திப்போகிற குரல் இல்லை. எனது குரல் இந்தப் பாடலுக்கு சரியாக இருக்கும் என்று இசையமைப்பாளர்கள் அழைத்தால் கட்டாயம் பாடுவேன்.
ஃபேஸ்புக்கில் இருக்கும் நீங்கள், ட்விட்டர் தளத்துக்கு வர தயங்குவது ஏன்?
6-ம் வகுப்பு படிப்பதில் இருந்தே ஃபேஸ்புக்கில் இருக்கிறேன். அதை மட்டுமே பயன்படுத்துகிறேன். என் அதிகாரபூர்வ ஃபேஸ்புக் பக்கத்தை நான் பார்ப்பதுகூட கிடையாது. அதை எனக்காக யாரோ நடத்தி வருகின்றனர். ட்விட்டரில் நேரம் செலவழிப்பதை நான் விரும்பவில்லை. ஒரு படத்தை எடுத்து, அது பற்றிய கருத்தைப் பதிவேற்றுவதை நான் விரும்புவது இல்லை. அந்த நேரத்தை வேறு உருப்படியான விஷயத்துக்கு பயன்படுத்தலாம்.
பரதநாட்டியம் கற்றீர்களே, எந்த அளவில் இருக்கிறது?
பரதநாட்டிய பயிற்சியை சில நாட்களாக நிறுத்தி இருக்கிறேன். அதற்கு என் சோம்பேறித் தனம்தான் காரணம். திரையுலகில் நுழைந்த பிறகு, நடனத்துக்காக நேரம் ஒதுக்க முடிய வில்லை. நடன நிகழ்ச்சி ஏதாவது இருந்தால் 2 வாரத்துக்கு முன்பு நடனப் பயிற்சி செய்வேன், அவ்வளவுதான். சென்னை கலாஷேத்ராவில் இணைந்து பரதநாட்டியம் கற்றுக்கொள்ளும் எண்ணம் இருக்கிறது. ஏனென்றால், அங்கு தான் என் அம்மா நடனம் கற்றுக்கொண்டார்.
உங்களைப் பற்றி வதந்திகள், கிசுகிசுக்கள் வரும்போது என்ன செய்வீர்கள்?
அதுபோன்ற செய்திகள் வராமல் இருந் தால்தான் வருத்தப்படுவேன். கிசுகிசு செய்திகள் இருந்தால் மட்டுமே நாம் தொடர்ச்சியாக திரையுலகில் இருக்கிறோம் என்ற எண்ணம் வருகிறது. ‘இவர்களைப் பற்றி எழுதினால் மக்கள் படிப்பார்கள்’ என்றுதானே எழுதுகிறார்கள். அதனால் கிசுகிசு செய்திகளை ரொம்ப ரசிப்பேன்.
பெண்கள் தனியாக வெளியே செல்வதால்தான் பிரச்சினை என்கிறார்கள். இதில் உங்கள் கருத்து என்ன?
நான் அதிகாலை 3 மணிக்கு எழுந்து தனியாகத்தான் செல்கிறேன். வெளிநாடுகளில் என்றால் தைரியமாக போவேன். இங்கு ஆண் நண்பர்களோடு செல்வேன். எனக்கு தோழிகள் மிகவும் குறைவு. அமெரிக்காவில் பெண்கள் சிறு உடைகள் அணிந்துகொள்வது அவர்களது கலாச்சாரம். நாம் அங்கு அது போன்ற உடைகளை அணிந்தால் பிரச்சினை இல்லை. அதை இங்கு அணிய முடியாது. நம் கலாச்சாரம் முற்றிலும் மாறுபட்டது. அமெரிக்காவில் என்ன உடை அணிந்தாலும், தனியாக வெளியே போனாலும் பெண்கள் பிரச்சினையின்றி இருக்கிறார்கள். நம் ஊரில் பிரச்சினைகள் அதிகம்.
நீங்கள் தனியாக வெளியே செல்லும்போது, வீட்டில் என்ன சொல்வார்கள்?
ரொம்ப பயப்படுவார்கள். அவர்களது பேச்சைக் கேட்காமல் சென்றுவிடுவேன். வீடு திரும்பிய பிறகு, ‘பத்திரமாக வந்துவிட்டேன் பார்’ என்பேன். ‘கவனமாக இரு. இது இந்தியா’ என்பார்கள். அதை மாற்ற வேண்டும். இளைய சமுதாயம் தனியாக வெளியே போகவில்லை என்றால் வேறு யார் போவார்கள்? அனைவரும் பயந்து வீட்டுக்குள் உட்கார்ந்தால் மாற்றம் எப்படி வரும்? பெண்கள் பயந்துகொண்டு, வீட்டிலேயே அடங்கிக் கிடக்கக் கூடாது. தைரியத்தோடு வெளியே வரவேண்டும். அப்படி இருந்தால்தான், வேலைக்குச் சென்று சொந்தக் காலில் நிற்கும்போது, நம்மை நாம் முன்னெடுத்துச் செல்ல முடியும்.
முக்கிய செய்திகள்
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago