கனவு தொழிற்சாலையை நசுக்கும் கட்டப்பஞ்சாயத்து

By குள.சண்முகசுந்தரம்

‘ரெமோ’ படத்தின் வெற்றிக்காக படக்குழுவினரின் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் “இந்தப் படத்துக்கு கடைசி நிமிடம் வரை இடைஞ்சல்கள் கொடுத்தார்கள். உங்களைக் கெஞ்சிக் கேட்கிறேன் எங்களை வேலை செய்ய விடுங்கள்; தயவு செய்து தடுக்காதீர்கள்’’ என்று நடிகர் சிவகார்த்திகேயன் கண்கலங்கிப் பேசியது கனவுத் தொழிற்சாலையில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

“சினிமா துறையில் நடைபெற்று வரும் கட்டப்பஞ்சாயத்து குறித்து நடிகர் சங்கத் தில் சிவகார்த்திகேயன் புகார் கொடுத்திருக் கிறார். நானும் இதுபோன்ற கட்டப்பஞ் சாயத்துகளால் பாதிக்கப்பட்டவன்தான்’’ என்று சிவகார்த்திகேயனின் விசும்பலை ஆமோதித்திருக்கிறார் தென்னிந்திய நடிகர் சங்க பொதுச் செயலாளர் விஷால்.

ஆண்டுக்கு ஆயிரம் கோடிக்கு மேல் வர்த்தகம் நடப்பதாகச் சொல்லப்படும் தமிழ் சினிமாத் துறையில் கண்ணீர்விட்டுக் கதறும் அளவுக்கு அப்படி என்னதான் கட்டப்பஞ்சாயத்து நடக்கிறது என்பதை அறிய சினிமா சம்பந்தப்பட்ட சிலரிடம் பேசினோம்.

முதலில் சிவகார்த்திகேயன் பிரச்சினை குறித்துப் பேசியவர்கள், “சின்னத்திரை மூலமாக பிரபலமான சிவகார்த்திகேயன், நாள் சம்பளத்தில் சினிமாவுக்குள் நுழைந்த வர். முதலில் இயக்குநர்களிடம் நல்ல மதிப் பும் மரியாதையும் வைத்திருந்த அவரது போக்கு வளர வளர மாறிவிட்டது. ஆரம்ப நாட் களில் அவருக்கு வாய்ப்புக் கொடுத்த இயக்கு நர்கள் பாண்டிராஜ், எழில் உள்ளிட்டவர் களுக்கு கூடுதலாக ஒரு படம் நடித்துக் கொடுப் பதாக போட்டுக்கொண்ட ஒப்பந்தத்தை அவர் மதிக்கவில்லை. மற்றவர்களுக்கு பணம் சம்பாதித்துக் கொடுப்பதற்கு பதிலாக, தானே படம் எடுத்தால் என்ன என்று யோசித்தார். அதற்காகவே தனது நெருங்கிய நண்பரை தயாரிப்பாளராக களத்தில் இறக்கினார். இந்த நிலையில்தான் அவரால் பாதிக்கப்பட்ட சிலர் சேர்ந்து ‘ரெமோ’ ரிலீஸுக்கு குடைச்சல் கொடுத்தார்கள். இது தொடர்பாக நடிகர் சங்கத்தில் அவர்களும் புகார் செய்திருக்கிறார்கள்.’’ என்றனர்.

சினிமா தொழிலில் நடக்கும் கட்டப் பஞ்சாயத்துக்கள் குறித்து அதனால் பாதிக் கப்பட்ட சிலர் இன்னும் விரிவாகப் பேசினார் கள். “அந்தக் காலத்தில் தயாரிப்பாளர்கள் தங்களது சொந்தப் பணத்தைப் போட்டு படம் எடுத்தார்கள். காலப்போக்கில் அந்த நிலைமை மாறி வட்டிக்கு கடன் வாங்கி படம் எடுத்தார்கள். ஒரு படத்தை எடுத்துவிட்டு அடுத்த படத்துக்கு பிரபலமான ஹீரோக்களிடம் கால்ஷீட் வாங்கி அதை வைத்து ஃபைனான்சியர்களிடம் கடன் வாங்கினார்கள். காலப்போக்கில் இப்படி கால்ஷீட் கொடுப்பதை ஹீரோக்கள் நிறுத்திக் கொண்டார்கள். அதற்குக் காரணம் சினிமாத்துறைக்குள் நுழைந்த கார்ப்பரேட் கம்பெனிகள்தான்.

தாங்கள் நினைத்த ஹீரோவை நடிக்க வைப்பதற்காக கார்ப்பரேட் நிறுவனங்கள் சம்பளத்தை வாரிவழங்கின. 4 கோடி ரூபாய் வாங்கிக் கொண்டிருந்த ஹீரோவுக்கு 15 கோடி ரூபாய் கிடைத்தால் எப்படி இருக்கும்? இப்படி ஏற்றிவிட்டவர்கள் எதிர்பார்த்த லாபம் பார்க்க முடியவில்லை என்றதும் சினிமா தொழிலைவிட்டுப் போய்விட்டார்கள். ஆனால், ஹீரோக்கள் ஏற்றிய சம்பளத்தை இறக்கிக்கொள்ளவில்லை. இதனால், சாமானியர்கள் யாரும் சினிமா எடுக்க முடியாத நிலையை உருவாக்கிவிட்டார்கள்’’ என்று ஆதங்கப்பட்டார்கள்

இன்னும் சில தகவல்களை பகிர்ந்து கொண்ட நடிகர் சங்க பொறுப்பாளர் ஒருவர், “சினிமா தொழிலுக்குள் கந்துவட்டிக் கும்பலின் அதிகாரம் அதற்கு மேல் இருக் கிறது. தென் மாவட்டங்களில் கந்துவட்டி செய்துகொண்டிருந்த உடன் பிறப்புகள் இருவர்தான் இப்போது தமிழ் சினிமா உலகின் தலையெழுத்தை தீர்மானிக்கிறார்கள். லட்சங்களைக் கட்டிக் கொண்டு சென்னைக்கு வந்த இவர்கள், இப்போது பல நூறு கோடிக்கு அதிபதி; முக்கிய நகரங்களின் பிரபல தியேட்டர்களை தங்கள் பிடிக்குள் வைத்திருக்கும் இவர்கள், முக்கிய ஏரியாக்களின் விநியோக உரிமை களையும் வைத்திருப்பதால் இவர்கள் நினைத்தால் ஒரு படத்தை ஓடவிடாமல் முடக்கி விடமுடியும்.

இவர்களோ இவர்களது ஏஜெண்டுகளோ, புதுப்படத்துக்கு பூஜை போடும்போதே அட்வான்ஸ் கொடுத்துவிடுவார் கள். முதலில் ’மினிமம் கியாரண்டி’ என்று ஒப்பந்தம் போடுவார்கள். படம் ஓடாவிட்டால் நஷ்டத்தை ஈடுகட்டுங்கள் என்று ஹீரோக்களுக்கு நெருக்கடி கொடுப்பார்கள். இதற்கு சம் மதிக்காவிட்டால் அந்த நடிகரின் அடுத்த படம் வெளிவரமுடியாதபடி ‘ரெட்கார்டு’ போடச் சொல்வார்கள். இதற்குப் பயந்து ரஜினிகாந்த் உள்ளிட்டவர்களே இவர்களுக்கு பணிந்து போன சம்பவங்கள் உண்டு.

படம் ஓடும் என்று நினைத்து இவர்களிடம் கந்து வட்டிக்கு பணம் வாங்கி படம் எடுத்த பலபேர் ஓட்டாண்டி ஆகிப்போன நிகழ்வு களும் உண்டு. இன்றைய தேதியில் தமிழில் மட் டுமே சுமார் 250 படங்கள் ரிலீஸ் செய்ய முடியாமல் முடங்கிக் கிடக்கின்றன. இதற்குக் காரணம் இதுபோன்ற நிதி விவகாரங்களும் அதன் பின்னணியில் நடக்கும் கட்டப் பஞ்சாயத்து அத்துமீறல்களும்தான்.

இந்தத் தொழிலின் உண்மை நிலவரம் தெரியாமல், பலர் சினிமாவுக்கு வந்து ஓட் டாண்டிகள் ஆகி இருக்கிறார்கள். அந்தக் காலத்தில் நடிகர்களை இயக்குநர்கள் இயக்கினார்கள். ஆனால், இப்போது இயக்குநர்களை நடிகர்கள் இயக்குகிறார் கள். நடிகர்கள் தங்கள் சம்பளத்தை குறைத்துக் கொள்ளாதவரை, கந்துவட்டிக்கு பணம் வாங்கி படம் எடுப்பது ஒழியாத வரை சினிமா தொழிலில் கட்டப்பஞ்சாயத்துக்களை ஒழிக்கவும் முடியாது, புதிய சிந்தனை, புதிய கனவுகளை விதைக்கவும் முடியாது’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

8 mins ago

சினிமா

23 mins ago

சினிமா

38 mins ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

மேலும்