கார்த்திக்கு வைரக் காப்பு, முத்தையாவுக்கு மோதிரம் - ‘விருமன்’ வசூலால் விநியோகஸ்தர் தந்த பரிசு

By செய்திப்பிரிவு

'விருமன்' திரைப்படம் வெற்றி பெற்றதையடுத்து கார்த்தி, சூர்யா, முத்தையாவுக்கு படத்தின் விநியோகஸ்தர் சக்திவேலன் வைரத்தால் ஆன காப்பு, மோதிரங்களை பரிசளித்தார்.

முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடித்த 'விருமன்' திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்தில் அதிதி சங்கர், பிரகாஷ்ராஜ், சூரி, ராஜ்கிரண், சிங்கம் புலி, வடிவுக்கரசி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்த படத்தை 2டி என்டர்டெயின்ட்மென்ட் நிறுவனம் சார்பில் சூர்யா தயாரித்திருந்தார்.

படத்தை தமிழகம் முழுவதும் சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் சக்திவேலன் வெளியிட்டிருந்தார். 'விருமன்' படம் வெளியான ஐந்து நாட்களில் உலக அளவில் ரூ.40 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. இதனை கொண்டாடும் வகையில் சென்னையில் வெற்றி விழா நடைபெற்றது.

இதில் கலந்துகொண்ட படத்தின் தயாரிப்பாளரான நடிகர் சூர்யாவிற்கும், இணை தயாரிப்பாளர் ராஜசேகர் பாண்டியனுக்கும், படத்தின் நாயகனான கார்த்திக்கும் படத்தை தமிழகம் முழுவதும் வெளியிட்டிருக்கும் சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சக்திவேலன் வைரக் காப்பினை பரிசளித்தார்.

இந்த படத்தின் இயக்குநரான முத்தையாவிற்கும் வைர மோதிரத்தை அன்பளிப்பாக அவர் வழங்கினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

8 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்