“நிச்சயமாக இந்தியரே” - பிறந்தநாள் வாழ்த்து கூறிய கமலுக்கு ஷங்கர் நன்றி

By செய்திப்பிரிவு

'இந்தியன்' படத்தின் அடைமொழியுடன் நடிகர் கமல் சொன்ன வாழ்த்துக்கு இயக்குநர் ஷங்கர் பதிலளித்துள்ள விதம் ரசிகர்களைக் கவர்ந்துள்ளளது.

1993-ம் ஆண்டு வெளியான 'ஜென்டில்மேன்' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குநராக அறிமுகமானார் ஷங்கர். தொடர்ந்து பல்வேறு வெற்றிப் படங்களை கொடுத்தவர், இறுதியாக ரஜினியை வைத்து '2.0' படத்தை இயக்கினார். கோலிவுட் திரையுலகில் இன்றும் அந்தப் படத்தின் வசூலை எந்தப் படமும் முறியடிக்கவில்லை. பிரமாண்ட இயக்குநர் என பெயர் பெற்ற ஷங்கர் தனது 59-வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார்.

அவருக்கு திரையுலகினர் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், ''‘இந்தியன்’ என்பதில் பெருமிதம் கொள்வோம்; இணைந்தே இன்னும் பல சாதனைகள் செய்வோம்! பிரமாண்ட திரைப்படங்களால் இந்தியாவையே திரும்பிப் பார்க்கச் செய்த இயக்குநர் ஷங்கர் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்'' என பதிவிட்டிருந்தார். அதற்கு இயக்குநர் ஷங்கர், ''நிச்சயமாக ‘இந்தியரே’. என் பிறந்தநாளை சிறந்த நாளாக்கியது உங்கள் வாழ்த்து மிக்க நன்றி'' என பதிலளித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

3 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

மேலும்