இயக்குநர் பா.ரஞ்சித் தனது நீலம் புரொடக்சன்ஸ் சார்பில், ‘பரியேறும் பெருமாள்’, ‘ரைட்டர்’, ‘சேத்துமான்’, ‘குதிரைவால்’, ‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’, ‘நட்சத்திரம் நகர்கிறது’ ஆகிய படங்களைத் தயாரித்துள்ளார். அவர் இப்போது, கணேச மூர்த்தியின் லெமன் லீப் கிரியேசன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து கிரிக்கெட்டை மையமாகக் கொண்ட படத்தைத் தயாரிக்கிறார்.
இதில், அசோக் செல்வன், சாந்தனு பாக்யராஜ், பிருத்வி பாண்டியராஜன், கீர்த்தி பாண்டியன், திவ்யா துரைசாமி உட்பட பலர் நடிக்கின்றனர். பா.ரஞ்சித்திடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய ஜெய்குமார் இயக்குகிறார். தமிழ்ப்பிரபா, ஜெய்குமார் இதன் திரைக்கதை, வசனத்தை எழுதியுள்ளனர். தமிழழகன் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு, கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார்.
கிரிக்கெட் விளையாட்டு மூலம் பிணைக்கப்பட்ட உணர்வுகள், நட்பு ஆகியவற்றை விவரிக்கும் வகையில் இந்தப் படம் உருவாகிறது. அரக்கோணம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் படப்பிடிப்பு நடக்கிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
8 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago