‘வாரிசு’ ஷூட்டிங் இடைவெளியில் திரையரங்கில் படம் பார்த்த விஜய் - வைரல் புகைப்படம்

By செய்திப்பிரிவு

'வாரிசு' படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், நடிகர் விஜய் ஹைதராபாத்தில் உள்ள திரையரங்கில் தெலுங்கு படத்தை கண்டு ரசித்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

'பீஸ்ட்' படத்தைத் தொடர்ந்து தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் விஜய் நடிக்கும் பைலிங்குவல் படம் 'வாரிசு'. தமன் இசையமைக்கும் இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா பிரபு, சரத்குமார், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு, சங்கீதா உட்பட பலர் நடிக்கின்றனர். குடும்பக் கதையாக உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், 'வாரிசு' படத்தின் படப்பிடிப்புக்கு நடுவே நேற்று நடிகர் விஜய் ஹைதாராபாத்தில் உள்ள மகேஷ்பாபுவுக்கு சொந்தமான திரையரங்கில் தெலுங்கு படத்தைப் பார்த்துள்ளார். நடிகர் நந்தமுரி கல்யாண் ராம் நடித்துள்ள 'பிம்பிசாரா' (Bimbisara) படத்தை காண அவர் திரையரங்கிற்கு வருகை தந்துள்ளார். அவர் காருக்குள் இருப்பது போலவும், திரையரங்கில் நடந்து செல்வது போன்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றனர்.

நடிகர் விஜய், த்ரிஷா நடிப்பில் கடந்த 2005-ம் ஆண்டு வெளியான 'ஆதி' படத்தின் தெலுங்கு ரீமேக்கான 'அதனொக்கடே' (Athanokkade) படத்தில் நடித்தவர் நந்தமுரி கல்யாண் ராம் என்பது குறிப்பிடத்தக்கது.

அண்மையில் 'வாரிசு' படத்தின் சில ஷூட்டிங் காட்சிகள் சமூக வலைதளங்களில் முறைகேடாக பரவின. இதனையடுத்து படப்பிடிப்பு தளத்தில் யாரும் தொலைபேசிகளை பயன்படுத்த வேண்டாம் என படக்குழு உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்