'இளையராஜா என் படத்திற்கு இசையமைப்பது எனக்கு கிடைத்த பாக்கியம்' என லக்ஷ்மி ராமகிருஷ்ணன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
கடந்த 2008-ம் ஆண்டு வெளியான 'பிரிவோம் சந்திப்போம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் லக்ஷ்மி ராமகிருஷ்ணன். தமிழில் பல்வேறு படங்களில் நடித்தவர், 2012-ம் ஆண்டு வெளியான 'ஆரோகணம்' படத்தின் மூலம் இயக்குநரானார். தொடர்ந்து, 'நெருங்கி வா முத்தமிடாதே' (2014), 'அம்மணி' (2016), 'ஹவுஸ் ஓனர்' (2019) ஆகிய படங்களை இயக்கினார். இதில் 'அம்மணி' மற்றும் 'ஹவுஸ் ஓனர்' திரைப்படங்கள் விமர்சன ரீதியாக பாராட்டைப் பெற்றது.
அந்த வகையில் தற்போது அவர் சமுத்திரகனி, அபிராமி, மிஸ்கின், ரோபோ சங்கர் நடிப்பில் உருவாகும் புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. விரைவில் படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், அவரது புதிய படத்தில் இசையமைப்பாளர் இளையராஜா இசையமைக்க இருப்பதாக அவர் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார். ''மேஸ்ட்ரோ இளையராஜா என் படத்துக்கு இசையமைப்பது எனது பாக்கியம். படத்தின் ரீ-ரெக்கார்டிங்கிற்காக காத்துக்கொண்டிருக்கிறேன். இறுதிக்கட்டப் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது'' என தெரிவித்துள்ளார்.
» கமல்ஹாசன் 62 - விருதுகளின் நாயகன் பெற்ற அங்கீகாரங்களின் பட்டியல்
» லால் சிங் சத்தா Vs ரக்ஷா பந்தன்... பாலிவுட் வசூலில் முந்துவது எது?
முக்கிய செய்திகள்
சினிமா
49 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago