'நீ என் தங்கச்சி' - தூய்மைப் பணியாளருடன் வடிவேலு புகைப்படம்

By செய்திப்பிரிவு

நடிகர் வடிவேலு பண்ணாரி மாரியம்மன் கோயிலில் தூய்மைப் பணியாளர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். 'நீ என் தங்கச்சி மாதிரி' என அவரிடம் உரிமையோடு பேசினார்.

நடிகர் வடிவேலு தற்போது படப்பிடிப்புகளில் பிஸியாக இருக்கிறார். அந்த வகையில், மைசூரில் நடந்த படப்பிடிப்பில் கலந்துகொண்டு கோவைக்கு காரில் புறப்பட்டுச் சென்ற நடிகர் வடிவேலு இடையில் ஈரோட்டில் இறங்கினார். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரி அம்மன் கோயிலுக்கு நேற்று மதியம் 3 மணி அளவில் வருகை தந்தார்.அவரை கோயில் நிர்வாகிகள் வரவேற்றனர்.

கோயிலுக்கு சென்று அம்மனை தரிசனம் செய்தார். பின்னா் அவர் அங்கிருந்துவெளியேறி கோயிலில் உள்ள அலுவலகத்தில் உட்கார்ந்து கொண்டார். வடிவேலு வருகை குறித்து பக்தர்களுக்கு தெரிய வரவே அவரை மக்கள் சூழ்ந்து கொண்டனர். பின்னர், அவருடன் சிலர் புகைப்படம் எடுத்துக்கொண்டதோடு, சிலர் செல்ஃபி எடுத்தனர்.

இந்நிலையில், கோயிலில் தூய்மைப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பெண் ஒருவரை வடிவேலு திடீரென அழைத்தார். அந்த பெண் வடிவேலுவைப்பார்த்ததும் அவரது காலில் விழுந்து ஆசி பெற்றார். உடனே அந்தப்பெண்ணை தூக்கிவிட்ட வடிவேலு, 'நல்லா இருப்பீங்க' என வாழ்த்தினார். தொடர்ந்து அந்த பெண்ணை "நீ என் தங்கச்சி" எனக்கூறியபடி, அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். வடிவேலு தன்னுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டதால் அந்தப் பெண் நெகிழ்ச்சியடைந்தார். பின்னர் அனைவருக்கும் நன்றி தெரிவித்துவிட்டு அவர் அங்கிருந்து காரில் புறப்பட்டு கோவை சென்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

5 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

மேலும்